ஸ்ரீகரவீரேஸ்வரர் திருக்கோவில், கரவீரம், கரையபுரம்,

India / Tamil Nadu / Thiruvarur /
 கோவில், சிவன் கோயில், samadhi (en), தேவாரத் திருத்தலங்கள்

SCN091 - ஸ்ரீ ப்ரத்யக்ஷ மின்னம்மை சமேத ஸ்ரீ கரவீரநாதர் திருக்கோவில், திருக்கரவீரம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 91வது தலம். கரவீரம் - பொன்அலரி. அலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.சிறிய ஊர்; கோயில் பெரியது.அம்பாள் சந்நிதி - திருமணக்கோல காட்சி.
JvST - ஜீவசமாதி தலம்,"ஸ்ரீகௌதம முனிவர்" ஜீவசமாதி அடைந்த தலம்,அமாவாசை நாட்களில் பெண்கள் ஸ்ரீகவுதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு (பொன்அலரி) தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள்.MukT - கழுதைக்கு முக்தி கொடுத்த திருத்தலம்,சிவபெருமானின் தரிசனம் கிடைத்த கழுதை மகிழ்ச்சியில் கடற்கரை வரை சென்று அங்கிருந்தபடியே வணங்கி முக்தி பெற்றது. இந்த காரணத்தால் இங்கு கொடிமரம் இல்லை, இறைவன் சந்நிதியில் இருந்து நாகூர் கடற்கரை வரை (சுமார் 32கிமீ தொலைவு) வீடுகளே கிடையாது. ஸ்ரீப்ரத்யட்ச மின்னம்மையும் மிகுந்த வரப்ரசாதி. திருமணக் கோரிக்கைகளை சில கண்ணாடி வளையல்கள் கொடுப்பதாக வேண்டிக் கொண்டாலே நிறைவேற்றி வைத்து விடுகிறாள்.
shaivam.org/siddhanta/sp/spt_p_karaviram.htm
temple.dinamalar.com/New.php?id=296
அமைவிடம்:திருவாரூர் - கும்பகோணம் சாலையில் 'வடகண்டம்' என்னும் ஊரையடுத்து 'கரையபுரம்' என்று கேட்டுக் கோயிலையடையலாம். திருக்கண்ணமங்கை திவ்யதேசம் அருகே உள்ள கோவில் இது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°48'31"N   79°34'52"E
  •  170 கி.மீ
  •  175 கி.மீ
  •  244 கி.மீ
  •  299 கி.மீ
  •  394 கி.மீ
  •  427 கி.மீ
  •  443 கி.மீ
  •  450 கி.மீ
  •  467 கி.மீ
  •  541 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago