ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி (சீர்காழி)

India / Tamil Nadu / Sirkali / சீர்காழி
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN014 - ஸ்ரீபெரியநாயகி உடனுறை ஸ்ரீதோணியப்பர் திருக்கோவில் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 14வது தலம்.AvrT - திருஞானசம்பந்தர் மற்றும் கணநாத நாயனார் அவதரித்த பெரும்பதி.BrST - பைரவர் சிறப்பு கொண்ட தலம், அஷ்ட பைரவர்கள் இங்கு அருள் புரிகின்றனர்.JvST -ஸ்ரீசட்டைமுனி சித்தர் ஜீவசமாதி இங்குள்ளது.ஸ்ரீப்ரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப் படுகிறது.
சட்டநாதர் அம்பிகையிடம் கூற, அம்பாள் ஞானப்பால் பொற்கிண்ணத்தில் கொடுக்க, சம்பந்தர் அருந்தி ஆளுடைய பிள்ளையார் ஆன பதி.திருஞானசம்பந்தர் பிறந்து, நடந்து, மொழி பயின்ற அவரது திருமனை திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்குகின்றது.பிரம தீர்த்தக் கரையில்தான் சம்பந்தர் பெருமான் ஞானப்பாலையுண்டார்.இக்கோயில் வளாகத்தில் திருஞானசம்பந்தருக்குத் தனித் திருக்கோயில் உள்ளது.சட்டநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால், சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார்.திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று, அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் பதி.
சுந்தரர் இங்கு வந்தபோது, இஃது, சம்பந்தப்பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி.திருநீலகண்ட யாழ்ப்பாணர், சம்பந்தரை வணங்கி, அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி.
temple.dinamalar.com/New.php?id=495
www.shaivam.org/siddhanta/sp/spt_p_cirkazi.htm
அமைவிடம்: மயிலாடுதுறை - சிதம்பரம் இரயில் பாதையில் சீர்காழி நிலையத்திலிருந்து 1.5-கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - சிதம்பரம் பேருந்து பாதையில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி வெகுவாக உள்ளன. காழிச்சீராம விண்ணகர திவ்ய தேசம்,சப்தபுரீஸ்வரர் கோயில் ஆகியன அருகில் உள்ள மற்ற ஆலயங்கள்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°14'17"N   79°44'20"E
  •  225 கி.மீ
  •  577 கி.மீ
  •  692 கி.மீ
  •  763 கி.மீ
  •  813 கி.மீ
  •  819 கி.மீ
  •  845 கி.மீ
  •  1119 கி.மீ
  •  1127 கி.மீ
  •  1207 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago