சென்னை

India / Tamil Nadu / Madras /
 நகரம், capital city of state/province/region (en), millionaire city (en)

சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரும் ஆகும். 1997ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 54 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம்.
இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1997ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. சென்னப்ப நாயக்கர் என்பவரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரிட்டிஷார் வாங்கியதால் சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.
டிசம்பர் 2004 சுனாமி தாக்கிய இடங்களில் சென்னையும் ஒன்றாகும்.
கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம்
பிறகு மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட இவ்விடத்தைக் கைப்பற்றிய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியரும், ஆங்கிலேயருமே அடுத்த சில நூற்றாண்டுகள் ஆண்டனர். ஆங்கிலேயரின் ஆட்சியில் தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கிய இந்நகர் ஒரு மாநகரமாக வளர்ந்தது. பிறகு தென்னிந்தியா முழுவதும் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதை மதறாஸ் மாநிலமாக்கி, மதறாஸ் நகரத்தை அம்மாநிலத்தின் தலைநகராக்கினர்.
சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.
தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது.
பிரச்சினைகள்
· மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை
· அதிக மக்கள் தொகை அடர்த்தி
· 25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது
· மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல்
· வாகன நெரிசல்
· மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°3'9"N   80°11'19"E

கருத்துரைகள்

  • i want to see chennai in satilight camera
  • உங்களுக்கு தெரியுமா மெட்ராஸ் சென்னையின் நிஜமான பேர் அல்ல. ஆங்கிலேயர்கள் இதை மட்ராஸபட்டினம் என்று அழைத்தார் ஆனால் ஆண்டாண்டுக் காலமாக அங்கே இருந்த்வர்கள் அதை சென்னைப்பட்டினம் என்றே கூப்பிட்டார்கள்.
  • சென்னை மாநகராட்சியை மேலும் இரண்டு(தாம்பரம்,அம்பத்தூர்) புதிய மாநகராட்சியாக விரிவாக்கம் செய்து மொத்தம் மூன்று மாநகராட்சிகளாக உருவாக இருக்கிறது. தகவல்; வசந்தவாசல் அ.சலீம் பாஷா
  •  372 கி.மீ
  •  485 கி.மீ
  •  566 கி.மீ
  •  616 கி.மீ
  •  620 கி.மீ
  •  647 கி.மீ
  •  920 கி.மீ
  •  923 கி.மீ
  •  932 கி.மீ
  •  1011 கி.மீ