ஸ்ரீகைலாயநாதர் மலை, கைலாயம், கயிலாயம் | சிகரம், Jainism (en), pilgrimage (en), இந்துமத தத்துவம், buddhism (en), தேவாரத் திருத்தலங்கள்

Nepal / Darchula / Dashrathchand /
 சிகரம், Jainism (en), pilgrimage (en), இந்துமத தத்துவம், buddhism (en), தேவாரத் திருத்தலங்கள்

VNT05 - ஸ்ரீபார்வதி தேவி உடனுறை ஸ்ரீபரமசிவன் இருப்பிடம், திருநொடித்தான்மலை எனும் திருக்கயிலாயம், கயிலை மலை, திருக்கயிலாய மலை,கைலாசம்,கைலாச மலை.அழித்தல் தொழிலையுடைய உருத்திர மூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால் நொடித்தான்மலை (நொடித்தல் - அழித்தல்).TPuT - கைலாயம் அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற தலமும் கூட.மானசரோவர் ஏரியே தீர்த்தம்.
எங்கும் நிறைந்தவன், எண்ணிறைந்தெல்லை இல்லாதான்தன் திருவிடத்தைக் குறிக்கக் கிடைத்த இப்பேறு மற்றோருக்கும்,எமக்கும் வாய்த்தமைக்கு நன்றிகள் கோடி! இதுதான் இது மட்டும்தான் இவனிடம் என்று கூறமுடியாத எம்பெருமான் சிவப்பரம்பொருள் உமையவளோடு ஆட்சிபீடம் செய்தருளும் திருக்கைலாய மலை இதுவே!!பூ உலகின் பதிகளில் மிகச் சிறப்பு வாய்ந்த பதி.இது பூ கயிலாயம் எனவும் பெயர் பெறும். (இறைவனது இருப்பிடமாய் எங்கும் பரவியுள்ள அருவமாகிய கயிலாயம் வேறு.)
kayilaayam, kailaasam, kayilai, kailaayam, thirukkayilai, thirukayilai, thirukkailaayam, thirukailaayam, kailaasamalai, kailash, kayilaayamalai, kailaayamalai, kayilayamalai, kailayamalai,
கைலை மலை இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்து தான் பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் புறப்பட்டு ஓடுகின்றது.ஞானசம்பந்தர் திருக்காளத்தியைத் (தென் கயிலாயம்) தரிசித்தபின்பு அங்கிருந்தே கயிலாயம் நோக்கி மனத்தாற்கண்டு பாடிப் பரவினார்.அப்பர் பெருமான், கயிலாயத்தையும், அங்கு ஆளுநாயகன் வீற்றிருக்கும் அற்புதக் கோலத்தையும் காணுமது காதலித்து நெடிய யாத்திரையை மேற்கொண்டு; இந்த யாத்திரையின் பயனாக அவர் திருவையாற்றில் கயிலைத் தரிசனம் காணப் பெற்றார். அப்பர் பெருமானின் திருக்கயிலைத் திருத்தாண்டகங்கள் 'போற்றித் திருத்தாண்டகங்கள்' என்று போற்றப்படுகின்றன.இறைவனருளால் திருஅஞ்சைக்களத்திலிருந்து வெள்ளையானை மீதேறி சுந்தரர் கயிலைக்குச் சென்றபோது, திருவருட் கருணையை நினைந்து, "தானெனை முன்படைத்தான்" என்று பதிகம் பாடியவாறே போற்றிச் சென்றார். இப்பதிகம் வருணனால் இவ்வுலகில் திருஅஞ்சைக் களத்தில் சேர்ப்பிக்கப் பெற்று உலகிற்குக் கிடைத்தது.
இத்திருவிடம் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டுள் உள்ளதாகத் தெரிகிறது! 'கட்டுப்பாடுகள் நீங்க' இறைவன் அடியார்தம் திருவருள் வேண்டி வணங்குவோம் !
shaivam.org/hindu-hub/temples/place/207/thirunodithanma...
thirupugazhtemples.blogspot.com/2018/05/blog-post_27.ht...
அமைவிடம்:இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டம் வழியாக திபெத் எல்லை வரை இந்திய அரசு 2020-ஆம் ஆண்டில் சாலை அமைத்துள்ளது. இப்பாதை வழியாக 96 கிலோ மீட்டர் மட்டும் திபெத் வழியாக பயணித்தால் கயிலை மலையை அடையலாம். இதனால் பயண நேரம், சுற்றுலாச் செலவு குறைவாகிறது. எனவே சுற்றுப் பாதையான நேபாளம் வழியாக இந்தியர்கள் கயிலை யாத்திரை மேற்கொள்ள தேவையிராது.
Sree kailayanathar temple, kailayam, nodithan malai, kailash hills

VNT05 - sree parvathi devi sametha sree paramashiva, nodithan malai or kailash mountain is 5th vadanaattu(northern) thevara thalam.TPuT - Kailayam got thirupugazh hymns.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  31°3'58"N   81°18'54"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 1 year ago