ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருவாட்போக்கி

India / Tamil Nadu / Kulithalai / kulithalai road
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN001 - ஸ்ரீசுரும்பார்குழலி சமேத ஸ்ரீரத்னகிரீசர் ஆலயம், திருவாட்போக்கி சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 1வது தலம்.மலைக்கு ஐயர்மலை, ஐவர்மலை,அய்யர்மலை, திருவாட்போக்கி, ரத்னகிரி, சிவாயமலை,அரதனாசலம் எனப் பல பெயர்கள். ஸ்வாமிக்கோ அரதனாசலேசர், வாட்போக்கிநாதர், முடித்தழும்பர்,மாணிக்கேசர், ரத்னகிரீஸ்வரர், மலைக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் எனப் பல பெயர்கள்.
SrPT - சூர்யபூஜை தலம், சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாள்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.KWT - கலியுக அதிசய தலம், இம்மலை மீது காகங்கள் பறப்பதில்லை.மேலும் இறைவருக்கு அபிஷேகம் செய்யப்ப்படும் பால் தயிராகும் அதிசயமும் நடக்கிறது.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கே இடி பூஜை தடைபெறுகிறது. ஆயினும் ஆலயத்திற்கோ,அதிலுள்ள சிலா மூர்த்தங்களுக்கோ எந்தவொரு பாதகமும் ஏற்படுவதில்லை.PT Health - இது ஒரு நோய் தீர்க்கும் மருத்துவ மலை. MVT - மூலவர் விஷேச தலம்,லிங்கத்தின் மீது வாள் வெட்டிய தழும்பு உள்ளது.
shaivam.org/siddhanta/sp/spt_p_vatpokki.htm
temple.dinamalar.com/New.php?id=553
அமைவிடம்: குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் ஒன்பது கிமி தூரத்தில் உள்ளது வாட்போக்கி எனப்படும் ரத்தினகிரி மலை.

இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.மாணிக்கம் வேண்டிவந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நீரால் நிரப்பச் சொன்னார், அது எப்படியும் நிரம்பால் இருக்கக் கண்டு, கோபங் கொண்ட அரசன், உடைவாளை ஓச்ச, இறைவனும் மாணிக்கத்தைத் தந்து அருளினார். மனம் திருந்திய அரசன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு. அம்மன்னன் வெட்டியதால் சுவாமிக்கு முடித்தழும்பர் என்றும் பெயர் பெறலாயிற்று. இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.
இடையன் ஒருவன் சுவாமிக்காகக் கொண்டு சென்ற பாலைக் கவிழ்த்த காகம் எரிந்து போனதால், இம்மலையில் காகங்கள் உலவுவதில்லை என்பது செவிவழிச்செய்தி. "காகம் அணுகாமலை" என்பர். "காகம் மேவுறில் கடுந்தழல் வீசிடும் பரம்பு " என்பது நாகைக் காரோணப் புராணத் தொடர்.
அருகில் உள்ள கடம்பர் கோயில், வாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் முறையே காலை, நண்பகல், அந்தியில் தரிசித்தல் சிறப்பு என்பது மரபு.
அகத்தியர் இங்குச் சுவாமியை நண்பகலில் தரிசித்து அருள் பெற்றமையால் இங்கு நண்பகல் தரிசனம் விசேஷம். இதனால் இவ்விறைவன் "மத்தியான சுந்தரர்" என்றும் வழங்குகிறார்.
மூலவர் சுயம்பு மூர்த்தி. கோயில் மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.இப்பெருமானுக்கு நாடொறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'42"N   78°23'6"E
  •  26 கி.மீ
  •  107 கி.மீ
  •  169 கி.மீ
  •  227 கி.மீ
  •  246 கி.மீ
  •  250 கி.மீ
  •  255 கி.மீ
  •  255 கி.மீ
  •  296 கி.மீ
  •  307 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago