சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பவானி, (Bhavani)

India / Tamil Nadu / Bhavani
 கோவில், தேவாரத் திருத்தலங்கள்

First temple of the kongku nAdu thevAra series. there are seven temples in this series!

KNT03 bavAni, thirunaNA, sanggamEswarar temple, bhavaani, bavaani,

திருநணா, பவானி முக்கூடல், வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் ஆலயம்!

முத்தேர் நகையாள் இடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தார் இடம்போலும் சோலைசூழ்ந்த
அத்தேன் அளியுண் களியால் இசைமுரல ஆலத்தும்பி
தெத்தேன் எனமுரலக் கேட்டார் வினை கெடுக்கும் திருநணாவே.
-திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 3வது தலம்.


இத்தல விநாயகர் சங்கம விநாயகர்! காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்தநதி மட்டும் கண்ணிற்கு தெரியாது.இந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம். மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், "தென்திரிவேணி சங்கமம்' என அழைக்கப்படுகிறது. எனவே இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் எனப்படுகிறார்.வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நண்ணாத (அணுகாத) பதியாதலின், நணா எனப் பெற்றது. அம்மன், நதி, தலம் மூன்றிற்கும் ஒரே பெயர். பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று.

பித்ரு தோஷ, புத்திர தோஷ நிவாரண தலம்!இங்கு பெருமாள் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடனும், தாயார் சவுந்தரவல்லி என்ற திருநாமத்துடனும், அருள்பாலிக்கின்றனர்.
வில்லியம் கரோ என்ற ஆங்கிலேயனை இடிந்து விழ இருந்த வீட்டில் இருந்து காப்பாற்றிய (ஆதிபராசக்தி படத்திலும் வருகிறது)அன்னை இவள்தான்! இவர் அளித்த தங்க தொட்டில் இந்த நிகழ்வுக்கு சான்றாக இன்னும் இருக்கிறது!

மூலவர் கிழக்கு நோக்கியும், குபேரன் பூஜித்ததால் ராஜகோபுரம் வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது.சிவன் சன்னதிக்கு பின்னால் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளது. விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் எனப்படுகிறது. ராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளான். ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது பட்டு சூரிய பூஜை நடப்பது சிறப்பு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°26'9"N   77°40'58"E
  •  51 கி.மீ
  •  161 கி.மீ
  •  201 கி.மீ
  •  213 கி.மீ
  •  362 கி.மீ
  •  690 கி.மீ
  •  903 கி.மீ
  •  999 கி.மீ
  •  1051 கி.மீ
  •  1215 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago