ஸ்ரீ சாயாவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சாய்க்காடு, (சாயாவனம்)

India / Tamil Nadu / Tirumullaivasal /
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NCN009 - ஸ்ரீகுயிலினும் நன்மொழியம்மை உடனுறை ஸ்ரீசாயவனேஸ்வரர் ஆலயம் திருச்சாய்க்காடு சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 9வது தலம்.MUT - இயற்பகை நாயனார் முக்தித் தலம். MKT - ஸ்ரீகோட்செங்கட்சோழர் கட்டிய மாடக்கோவில்களுள் ஒன்று.PT ChathrunAsanam - எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம்.இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார்.எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீரகண்டரமணி.பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால், இத்தலம் இப்பெயர் பெய்ற்றது.ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதாலும் (இதனை சாய் - ஒளி என்பர்.) இப்பெயர் பெற்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்றத் திருத்தலம். காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் ஒன்று. மற்றவை 1. திருவெண்காடு, 2. மயிலாடுதுறை, 3. திருவிடைமருதூர், 4. திருவையாறு 5. திருவாஞ்சியம்.இத்திருக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாகி அம்மன் கோயில் உள்ளது.
temple.dinamalar.com/New.php?id=506
www.shaivam.org/siddhanta/sp/spt_p_caykkadu.htm

Location:இது, சீர்காழிக்குத் தென் கிழக்கே12கீ.மீ. தூரத்தில் உள்ளது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°8'51"N   79°49'25"E
  •  201 கி.மீ
  •  214 கி.மீ
  •  271 கி.மீ
  •  318 கி.மீ
  •  431 கி.மீ
  •  464 கி.மீ
  •  473 கி.மீ
  •  487 கி.மீ
  •  503 கி.மீ
  •  570 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago