ஸ்ரீவலம்புரநாதர் ஆலயம், திருவலம்புரம், மேலப்பெரும்பள்ளம்

India / Tamil Nadu / Tirumullaivasal /
 சிவன் கோயில், samadhi (en), தேவாரத் திருத்தலங்கள்

SCN044 - ஸ்ரீவடுவகிர்க்கண்ணி உடனுறை ஸ்ரீவலம்புர நாதர் ஆலயம், மேலப்பெரும்பள்ளம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 44வது தலம்.JvST - ஜீவசமாதி தலம், காவிரி மீண்டும் வர தன்னையே தியாகம் செய்த ஸ்ரீஹேரண்ட முனிவரின் ஜீவசமாதி இக்கோவிலின் எதிரில் அமைந்துள்ளது.MuVT - மூலவர் விஷேச தலம்,இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இத்தல விநாயகர் வல்லப விநாயகர் எனப்படுகிறார். மாடக்கோயில் எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் வீற்றிருக்கிறார்.புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தோல்வியாதி உள்ளவர்கள், ஸ்ரீஹத்தி(பெண்ணால் ஏற்படக்கூடியது) தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சப்த நாகதோஷம் உள்ளவர்கள் அவை நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். கீழ்ப்புறமுள்ளது கீழப் பெரும்பள்ளம் (kaethu parikaara thalam abt 2kms frm here) என்றும்; மேற்புறமுள்ளது மேலப் பெரும்பள்ளம் என்றும் பெயர் வரலாயிற்று. இக்கோயிலில் "பட்டினத்தாரை மன்னன் வரவேற்கும் ஐதீகவிழா " என்று ஒருவிழா நடைபெறுகிறது;
இத்தலத்தில் உள்ள சிறப்பு மூர்த்தி பிட்சாடனர் பேரழகுடன் இருப்பவர். "அர்த்தநாரீஸ்வர பிட்சாடனர்' என்பர். பிக்ஷாடானாரின் திருவுருவத் திருமேனி தரிசிக்க வேண்டிய ஒன்று! வலது காலை தூக்கியபடி நடக்கும் இயக்க நிலையில், அற்புத பாத தரிசனம்! இதில் அதிசயம் என்னவென்றால் எம்பெருமான் திருக்காலணியில் உயரக்கட்டை (ஹை ஹீல்ஸ்- high heals!) இருப்பதுதான்.
shaivam.org/siddhanta/sp/spt_p_valampuram.htm
temple.dinamalar.com/New.php?id=215
அமைவிடம்: மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து; அங்கிருந்தும், சீர்காழி - காவிரிப்பூம்பட்டினம் பேருந்தில் மேலையூர் சென்று அங்கிருந்தும் இத்தலத்தை அடையலாம்.கீழப்பெரும்பள்ளம் அருகே 3கிமீ தொலைவில்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°8'15"N   79°48'34"E
  •  200 கி.மீ
  •  212 கி.மீ
  •  270 கி.மீ
  •  317 கி.மீ
  •  430 கி.மீ
  •  463 கி.மீ
  •  472 கி.மீ
  •  486 கி.மீ
  •  502 கி.மீ
  •  569 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago