ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் ஆலயம், திருவண்ணாமலை (திருவண்ணாமலை)

India / Tamil Nadu / Tiruvannamalai / திருவண்ணாமலை
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

NNT22 - ஸ்ரீஉண்ணாமுலையாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயம், திரு அண்ணாமலை 22வது நடுநாட்டுத் தேவாரத்தலம்.ஸ்ரீஅபீதகுசலாம்பாள் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் என்பது சம்ஸ்கிருத மொழியில்.அண்ணுதல் என்றால் நெருங்குதல்,"அண்ணா" என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடி முடியை நெருங்க முடியாத நெருப்பு மலை, பக்தர்களை துன்பங்கள் அணுகவிடாத மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. PBuT - பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.APV vinayak - இங்கு வீற்றிருக்கும் அல்லல் போக்கும் விநாயகர் சந்நிதி ஸ்ரீவிநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று.SkPT - சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம். PT Family integration - குடும்பத்தில் அமைதி/மகிழ்ச்சி நிலவ வணங்க வேண்டிய தலம், தவமிருந்த உமை கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம்.PT pithru dhOsha nivarthi - பித்ரு தோஷம் நீக்கக்கூடிய தலம்,வல்லாள மன்னனுக்கு மகனாக வந்தவதரித்து இறைவன் அருள் செய்த பதி இதுவே.TPuT - அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.PT bhoomi dhOsham - சொந்த வீடு மற்றும் மனைகள் அமைய இங்கு வணங்கலாம்.அஷ்ட லிங்கங்களும் அமையப்பெற்ற வாஸ்து நிவாரண கிரிவலம் சிறப்புடையது.கார்த்திகை மாத கார்த்திகை மகா தீபத் திருவிழா உலகப் புகழ்பெற்றது.
temple.dinamalar.com/en/new_en.php?id=22
shaivam.org/hindu-hub/temples/place/150/thiruvannamalai...
அமைவிடம்:திருவண்ணாமலை நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°13'54"N   79°4'1"E
  •  154 கி.மீ
  •  482 கி.மீ
  •  618 கி.மீ
  •  653 கி.மீ
  •  699 கி.மீ
  •  734 கி.மீ
  •  757 கி.மீ
  •  1005 கி.மீ
  •  1032 கி.மீ
  •  1156 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago