ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவில், மதுரை, ஆலவாய் | சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

India / Tamil Nadu / Madurai /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

PNT01 - ஸ்ரீஅங்கயற்கண்ணி எனும் மீனாக்ஷி அம்மன் சமேத ஸ்ரீசொக்கநாதர் எனும் சுந்தரேஸ்வரர் ஆலயம், திருவாலவாய் எனும் மதுரை 1வது பாண்டியநாட்டுத் தேவாரத்தலம்.APV vinayak - ஸ்ரீவிநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று,ஸ்ரீ சித்திவிநாயகர் அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழியில் இருக்கிறார்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய 732 ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது அல்லது இடது வீரக்கரமும், மறு கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் இடம் அல்லது வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.SkPT - சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி பீடம்.PST03 - பஞ்ச சபைகளில் இதுரஜத சபை எனும் வெள்ளியம்பலம்.TDrT - ஸ்ரீநடராஜரின் தாண்டவ தரிசனம், இராஜசேகர பாண்டியன் வேண்ட இறைவன் கால்மாற்றி ஆடிய தலம்.MukT - முக்தித்தலம், இங்கு வாழும் எவரும் முக்தி கிடைக்க வரம் பெற்றவராவர்.HFeeT - இறைவர்தம் பொற்பதங்கள் தோய்ந்த திருத்தலம், 64 திருவிளையாடல்களை இறைவன் நேரில் வந்து நடத்திய அற்புதத் தலம்.NvPT buthan - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் புதன் சம்பந்தமான தோஷங்களுக்கு.PT Deaf/Dump - ஊமை,செவிடு,திக்குவாய் குறைபாடுகள் நீங்க பரிகாரத் தலம், ஸ்ரீமுருகப்பெருமான் ஸ்ரீகுமரகுருபரரின் ஊமைத்தன்மை நீக்கி கவிபாட வைத்த திருத்தலம்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், இறைவற்கு தடாதகைப் பிராட்டியுடன் திருமணம் நடந்த திருத்தலம்.PT Eyesight - கண் நோய்கள் தீர்க்கும் தலம்.FSAT - சிற்பம் மற்றும் கலைகளுக்காக பிரசித்தி பெற்ற திருக்கோவில்.
temple.dinamalar.com/New.php?id=21
shaivam.org/hindu-hub/temples/place/79/thiruaalavai-sok...
அமைவிடம்: கோவிலைச் சுற்றித்தான் மதுரை நகரே அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிவபெருமானுக்கான கோவில்களில் மதுரை மீனாக்ஷி சுந்தரேசுவரர் கோயில் சிறப்புடைய ஒன்றாகும். இக்கோயில் அம்மனுக்கான 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது....
சிறப்பம்சங்கள்:
நான்மாடக்கூடல்
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.
ஆலவாய்
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
பொற்றாமரைக்குளம்
கலையழகு மிக்க மண்டபங்கள்
தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள்
சித்திரைத் திருவிழா
வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா.
ஆனி ஊஞ்சல் உற்சவம்
ஆவணி மூல உற்சவம்
வளையல்,பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல்,நரியை பரியாக்கியது, விறகு விற்றல்...
புரட்டாசி நவராத்திரி கொலு
ஐப்பசி கோலாட்ட உற்சவம்.
கார்த்திகை பத்து நாட்கள் தீப உற்சவம்.
மார்கழி- ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள்.
தை - தெப்பத் திருநாள்
மாசி, பங்குனி - மண்டல உற்சவம்
பங்குனி உத்திரம்
அம்பாளும்,சுவாமியும் முருகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.
மேலும் தகவல்கள் www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idFie...
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°55'10"N   78°7'9"E

கருத்துரைகள்

  • Meenatchi Temple is very famous one of the world and very oldest mark in the world
  • 2000 years oldest power full temple
  •  16 கி.மீ
  •  118 கி.மீ
  •  119 கி.மீ
  •  140 கி.மீ
  •  192 கி.மீ
  •  205 கி.மீ
  •  205 கி.மீ
  •  212 கி.மீ
  •  225 கி.மீ
  •  227 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago