ஸ்ரீகொடுங்குன்றநாதர் ஆலயம், திருக் கொடுங்குன்றம், பிரான்மலை (பிரான்மலை)

India / Tamil Nadu / Ponnamaravathi / பிரான்மலை
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

PNT05 - ஸ்ரீகுயிலமுதநாயகி சமேத ஸ்ரீகடோரகிரீசர் எனும் கொடுங்குன்ற நாதர் ஆலயம், திருக்கொடுங்குன்றம் எனும் பிரான்மலை 5வது பாண்டியநாட்டுத் தேவாரத்தலம்.மலையின் அடிவாரத்தில் இருக்கும் இவரே பாடல் பெற்றவர். நடுவில் ஸ்ரீவிசாலாக்ஷி சமேத ஸ்ரீவிஸ்வநாதரும் மலை மேல் ஸ்ரீஅமிர்தவல்லி எனும் தேனாம்பாள் சமேத ஸ்ரீமங்கைபாகரும் ஆக மூன்று திருக்கோவில்கள்.TPuT - திருப்புகழ் திருத்தலம், முருகப் பெருமான் ஸ்ரீஅருணகிரி நாதருக்குத் தரிசனம் கொடுத்த தலம்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம்,மங்கைபாகர் மூலிகைச் சாற்றால் பண்ணப்பட்டவர்.MDTA - ஸ்ரீஅகஸ்தியர் திருமணக்காட்சி கண்ட தலங்களுள் ஒன்று,எனவே PT Marriage - திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலமும் கூட. PT Leprosy - குஷ்ட நோய் தீர்க்கும் திருத்தலம், பைரவர்க்கு தனியே அமைந்து இருக்கும் 'குஷ்டவிலக்கிச் சுனை' குஷ்ட நோய்கள் தீர்க்கும்.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம், தக்கிணாயன கடைசி மூன்று மாதங்களிலும் உத்தராயண முதல் மூன்று மாதங்களிலும் என ஆறு மாதங்கள் சூர்ய பூஜை நடக்கிறது. VdRT - வேதநெறி விளங்க வணங்க வேண்டிய திருத்தலம், ஸ்வாமி மங்கைபாகர் தன் திருக்கரங்களில் நான்கு வேதங்களையும் தாங்கி இருப்பது விசேஷம்.PT Family integration - குடும்பத்தில் அமைதி/மகிழ்ச்சி நிலவ வணங்க வேண்டிய தலம், கருத்து வேறுபாடுள்ள தம்பதியர்கள்,ஜாதகத்தில் சுக்கிரன்(NvPT சுக்கிரன்) தொடர்பான தோஷம் உள்ளவர்கள், இங்கு அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
"பெயரில்லா மரம்" மலைமீது சுவாமி (மங்கைபாகர்) சந்நிதிக்கு அருகில் உள்ளது. இதுகாறும் இம்மரத்தை எவராலும் பெயர் தெரிந்து சொல்லப்படாமையால் "பெயரில்லா மரம்" என்றே அழைக்கின்றனர்.KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம், இத்தலத்தின் தலவிருட்சம் உறங்காப்புளி மரமாகும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது.காய்ந்த நிலையிலேயே புளியங்காய், கீழே உதிர்ந்து விடும்.
temple.dinamalar.com/New.php?id=392
shaivam.org/hindu-hub/temples/place/83/thirukodungunram...
அமைவிடம்:மதுரையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 65 கி.மீ., தூரத்தில் பிரான்மலை உள்ளது.

இந்தக் கட்டடத்திலுள்ளவை

  1. SORNAVALLI THOPPU
 இடம் சேர்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°14'19"N   78°26'20"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago