ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் ஆலயம், திருநாகை காரோணம், நாகப்பட்டினம் (நாகபட்டிணம்)

India / Tamil Nadu / Nagapattinam / நாகபட்டிணம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN082 - ஸ்ரீகருந்தடங்கண்ணி எனும் ஸ்ரீநீலாயதாக்ஷி சமேத ஸ்ரீநாகைக்காரோணர் ஆலயம், திருநாகைக்காரோணம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 82வது தலம்.SVT - சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், இறைவர் ஸ்ரீசுந்தரர் பெருமானுக்கு பலவித பரிசுப்பொருள்களும், குதிரையும் தந்து அருளிய தலம்.AVT - ஸ்ரீஅதிபத்தநாயனாரின் அவதாரத் தலமான நுளைபாடி ஸ்ரீ அமுதீசர் திருக்கோவில் தற்போது அருகே நம்பியார் நகர் என்ற பெயரில் உள்ளது.MUT - ஸ்ரீஅதிபத்த நாயனார் மற்றும் ஸ்ரீபுண்டரீக மகரிஷி ஆகியோர் முக்தித் தலமும் இதுவே.TPuT - திருவாசியுடன் ஆறுமுகங்களுடன் மயில் மீது ஆரோகணித்த ஸ்ரீமுருகப்பெருமானை ஸ்ரீஅருணகிரிநாதர் திருப்புகழ் பாடி சிறப்பித்துள்ளார்.PT nAga dhosham - ஜாதகத்தில் நாகதோஷம் நீக்கக் கூடிய சக்தி வாய்ந்த தலங்களுள் ஒன்று.CRT - சாதி அரசியலைக் கேள்வி கேட்கும் திருத்தலம், இங்கு இறைபதம் சேரும் மீனவ இனத்தவரரின் பூதவுடலுக்கு கோவில் இறைவரின் திருமுன் புஷ்ப,தீர்த்த,வஸ்த்ரப் பிரசாதங்கள் வழங்கப்பட்டு மரியாதை செய்யப் படுகிறது.PT Eyesight - இங்கு அம்பாள் முன் வீற்றிருக்கும் சிற்பச் சிறப்புடைய 'இரட்டைப்பார்வை நந்தி'யை வணங்க பார்வைக் கோளாறுகள் நீங்கும்.JST - ஸ்ரீஅழுகுணிச் சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ள தலம்.
shaivam.org/siddhanta/sp/spt_p_nagai.htm
temple.dinamalar.com/New.php?id=205
அமைவிடம்: நாகப்பட்டினம் நகரின் நடுவே அமைந்துள்ள ஆலயம். ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திவ்யதேசம்,ஸ்ரீமாலையப்பர் திருக்கோவில்,ஸ்ரீபைரவர் ஆலயம், ஸ்ரீசட்டைநாதர் திருகோயில் ஆகியவை நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள பிற முக்கிய ஆலயங்கள்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°45'59"N   79°50'32"E
  •  160 கி.மீ
  •  175 கி.மீ
  •  230 கி.மீ
  •  280 கி.மீ
  •  389 கி.மீ
  •  421 கி.மீ
  •  431 கி.மீ
  •  444 கி.மீ
  •  461 கி.மீ
  •  529 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago