ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் திருக்கோயில், குடமூக்கு (கும்பகோணம்) (கும்பகோணம்)

India / Tamil Nadu / Kumbakonam / கும்பகோணம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN026 - ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீஅமுதேஸ்வரர் திருக்கோவில் குடமூக்கு சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 26வது தலம்.SkPT- சக்தி பீடக் கோவில்களுள் இது விஷ்ணு சக்தி பீடம்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.MMT - மகாமக தலவரலாறுடன் தொடர்பு கொண்ட தலம்.உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயமே.
குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது.தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன."கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.கும்பகோணத்தில் குடமூக்கு - கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் - நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் - சோமேசர் கோயில் என வழங்கப்படுகிறது.

shaivam.org/siddhanta/sp/spt_p_kudamukku.htm
temple.dinamalar.com/New.php?id=591
அமைவிடம்:மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். கும்பகோணம் நகரின் நடுவே அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°57'30"N   79°22'16"E
  •  182 கி.மீ
  •  201 கி.மீ
  •  268 கி.மீ
  •  326 கி.மீ
  •  413 கி.மீ
  •  446 கி.மீ
  •  466 கி.மீ
  •  469 கி.மீ
  •  486 கி.மீ
  •  564 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago