ஸ்ரீஆம்ரவனேஸ்வரர், திருமாந்துறை (Thirumanthurai)
India /
Tamil Nadu /
Lalgudi /
Thirumanthurai /
x
World
/ India
/ Tamil Nadu
/ Lalgudi
Bota / இந்தியா / தமிழ்நாடு / திருச்சிராப்பள்ளி
சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
NCN058- சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 58வது தலம்.SrPT - இறைவருக்கு பங்குனி 1-3 தேதிகளில் சூர்ய பூஜை நடக்கிறது.TPuT - இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.இந்த தலம் வடகரை மாந்துறை ஆகும்.
அமைவிடம்: லால்குடி இரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 5-கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது.
இறைவன்- ஆம்ரவனேஸ்வரர்:இறைவி-பாலாம்பிகை
தீர்த்தம் - காயத்ரி நதி
மரம்- மாமரம்.ஆம்ர என்றால் மாமரம். இத்தலத்தில் மாமரங்கள் அதிகமாக இருந்ததால் மாந்துறை என்று பெயர் பெற்றது.
கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலுள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியிலுள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை எனப்படுகிறது. தென்கரை மாந்துறை ஒரு தேவார வைப்புத்தலம்.
கோவில் ஒரு கிழக்கு நோக்கிய கோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுர வாயிலைக் கடந்து சென்றால் மிருகண்டு முனிவர் இறைவனை வழிபடும் சித்திரங்களைக் கண்டு மகிழலாம்.
பிராகாரத்தில் தலமரம், விநாயகர், முருகன், இலக்குமி, நவக்கிரகங்கள், பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கைத் திருமேனிகள் காட்சி தருகின்றன. நால்வருள், சுந்தரர் கைத்தடியேந்தி நிற்கின்றார். நவக்கிரக சந்நிதியில் இங்கு சூரியன் தனது இரு மனைவிகளுடன இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.
இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அம்பாள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள்.
மேற்குப் பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமான் சுமார் 5 அடி உயர கம்பீரமான தோற்றப் பொலிவுடன் உள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. அருகில் தண்டாயுதபாணி , காலஹச்தீஸ்வரர் சிற்றாலயங்கள் உள்ளன. வழமை போல் கருவறை கோட்டத்தில் நர்த்தனவிநாயகர் , தென்முகன் திருவிளங்க மூர்த்தி, நான்முகன் துர்க்கை உள்ளனர்.
திருவண்ணாமலையில் சிவபெருமான் முடியைக் கண்டதாக பொய் கூறிய பிரம்மா, தான் பெற்ற சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டார்
. சூரியனுடைய மனைவி சம்யாதேவி தன் கணவனின் உக்கிரமான ஒளியைப் பெறுத்துக் கொள்ள முடியாமல் இத்தலத்தில் தவமிருந்து சூரிய ஒளியைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றாள். கெளதம முனிவரின் மனைவி அகலிகையை தீண்டியதால் இந்திரனை கெளதம முனிவர் சாபமிட்டார். இந்திரன் தன்னுடைய சாபத்தை இத்தலத்தில் தவம் செய்து நீக்கிக் கொண்டான். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் உண்டான தோஷம் நீங்க சூரியன் வழிபட்டு பயன் அடைந்த தலம்.
முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர்.
இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள். கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது.
மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு இறைவனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் இறைவன் ஆம்ரவனேஸ்வரரரை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோயிலின் எதிரில் உள்ள மதுரை வீரனும் இக்கோயிலுடன் தொடர்பு படுத்தி வழிபாடு செய்தல் நலம் என கூறப்படுகிறது.

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°52'34"N 78°47'20"E
- ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், திருவாட்போக்கி 45 கி.மீ
- ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம் 70 கி.மீ
- ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருஇடைமருதூர், திருவிடைமருதூர் 74 கி.மீ
- ஸ்ரீதியாகராஜர் ஆலயம்,திருவாரூர் & ஸ்ரீஅசலேஸ்வரர் ஆலயம், ஆரூர்அரநெறி 93 கி.மீ
- ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில், சீர்காழி 111 கி.மீ
- ஸ்ரீநடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தில்லை, 115 கி.மீ
- சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பவானி, 136 கி.மீ
- ஸ்ரீராமநாத சுவாமி கோயில்,இராமேஸ்வரம் 186 கி.மீ
- TNT01 and TNDD049 / DD049- ஸ்ரீ ஏகாம்பரநாதர் மற்றும் ஸ்ரீநிலாத்துண்டப்பெருமாள் ஆலயம் ,காஞ்சிபுரம் 241 கி.மீ
- ஸ்ரீகைலாயநாதர் மலை, கைலாயம், கயிலாயம் 2263 கி.மீ
- Mr.Vellaisamy House 0.7 கி.மீ
- King Of Isreal Robinson Illam Kabarial Puram 1.6 கி.மீ
- john's home 2.1 கி.மீ
- SANMUGAM (DUBAI) 2.6 கி.மீ
- SHANMUGAM HOME 2.6 கி.மீ
- Nehru Nagar,Poovalu Road,Lalgudi 3.2 கி.மீ
- sivan kovil 3.2 கி.மீ
- திருவரசு சுவாமி கோயில் (Thiruvarasu swami temple) 4.5 கி.மீ
- sangilimurugan house 5.5 கி.மீ
- கல்லணை 5.9 கி.மீ