ஸ்ரீதிரிபுராந்தகர் ஆலயம்.திருவிற்கோலம், கூவம் (Koovam)

India / Tamil Nadu / Valasaravakkam / Koovam
 சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT14 - ஸ்ரீதிரிபுராந்தக நாயகி சமேத ஸ்ரீ திரிபுராந்தகேஸ்வரர் எனும் திருவிற்கோலநாதர் ஆலயம், திருவிற்கோலம் எனும் கூவம் 14வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சிறுத்த விநாயகராக' பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார்.அச்சிறுப்பாக்கத்தில் முறிக்கப்பட்ட சக்கர அச்சு விழுந்த இடம்.கூரம் எனும் தேர்க்கால் உடைந்து நின்றதால் கூரம், கூவம் எனத் திரிந்தது.இங்கு உருவானதால் நதி கூவம் நதி ஆனது. திரிபுராந்தகர்களுடன் போருக்குத் திருக்கரங்களில் வில்லுடன் சென்ற சிவபெருமானுக்கு "திருவிற்கோலநாதர்' என்றும், தலத்திற்கு "திருவிற்கோலம்' என்றும் பெயர். பின் சிவனார் ஸ்ரீவினாயகரை வேண்ட, விநாயகர் தேர் அச்சைச் சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார்.SCPT - ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஆலயம்,அம்பாளுக்கு முன்புறத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.PBuT chennai -சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது "அக்னி தலம்' ஆகும்.KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம்,இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுகிறது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் 'ஐயன் நல் அதிசயன் ' என்று குறிப்பிடுகின்றார்.மேலும் வயல்வெளி சூழ்ந்த திருத்தலத்தின் கூவாக்கினி தீர்த்தத்தில் சாபம் காரணமாக இன்றும் தவளைகள் வசிப்பதில்லை.அது மட்டுமா, கோயிலிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ள 'திருமஞ்சனமேடை' என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டு, இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்த்தம் கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து - அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் - செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து, அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் கண்டுக் கொள்ளலாம்.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம், இதனை சிறப்புகள் கொண்ட இறைவர் இங்கு சுயம்பு மூர்த்தி.TDrT - ஸ்ரீநடராஜரின் தாண்டவ தரிசன ஆலயம், ஆலங்காட்டுக் காளிக்காக இறைவர் இங்கு ஐந்தொழில்களில் அரிதான 'ரக்ஷீநடம்' எனும் 'காத்தல் நடனம்' ஆடுகிறார் எம்பெருமான்.பேரழிவுகளில் இருந்து உயிர்களைக் காக்க இவரிடம் வேண்டி நிற்க நல்லதே நடக்கும்.
ஆலயச் சிறப்பு:வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர்.இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் "தர்க்க மாதா' என்ற பெயரில் காளி அருளுகிறாள். சிவனுடன், தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும், கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.இப்பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேகம் பற்றிய அரிய செய்தி - கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள 'பிஞ்சிவாக்கம் ' கிராமத்திலிருந்து வேளாளர் குலமக்கள் தர, ஆயர் ஒருவர் நாடொறும் சுவாமிக்கு உச்சிக்கால அபிஷேகத்திற்கு எங்கும் கீழே வைத்து விடாமல் பயபக்தியுடன் பால் கொண்டு வருகின்றார்.இறைவர்க்கு கைங்கர்யம் செய்யும் போது குருக்களை யாரும் தீண்டலாகாது,அவ்வாறு தீண்ட அவர் தன்னை சுத்திகரித்துக் கொண்ட பிறகே மீண்டும் பூஜையைத் தொடர முடியும்.
temple.dinamalar.com/New.php?id=124
shaivam.org/hindu-hub/temples/place/175/thiruvirkolam-t...
அமைவிடம்:சென்னையிலிருந்து நேரே செல்லப் பேருந்து வசதி உள்ளது. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ரோடில் இறங்கிச் செல்லலாம்.எலுமியங்கோட்டூர் லிருந்து சுமார் 2கிமீ. தொடர்பு : 09443253325
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°1'16"N   79°49'39"E
  •  33 கி.மீ
  •  379 கி.மீ
  •  503 கி.மீ
  •  565 கி.மீ
  •  617 கி.மீ
  •  639 கி.மீ
  •  647 கி.மீ
  •  922 கி.மீ
  •  929 கி.மீ
  •  1037 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago