பண்டாரவாடை சிவன் கோயில் (மாப்படுகை பகுதி)

India / Tamil Nadu / Mayiladuthurai / மாப்படுகை பகுதி / Kallanai - Poompuhar State Highway (SH-22)

மயிலாடுதுறை- கல்லணை சாலையில் உள்ள தொடர்வண்டி இருப்புகதவுகளை தாண்டினால் உள்ளது மாப்படுகை , பண்டாரவாடை எனவும் அழைக்கப்படுகிறது. பிரதான சாலையின் வடக்கில் உள்ளது இக்கோயில். ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது வளாகம். கிழக்கு நோக்கிய கோயில் முகப்பு கோபுரமில்லை, சுதை அலங்கார வாயில் மட்டும் உள்ளது.முற்றிலும் செங்கல்லினால் கட்டப்பட்ட இக்கோயில் நீண்ட முகப்பு மண்டபம் கூடியதாக உள்ளது. கருவறை வாயிலில் லட்சுமி விநாயகர் உள்ளார். தென்முககடவுள், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோரும் உள்ளனர். கோயிலின் வடபுறம் பெரிய வன்னியின் கீழ் பழமையான ஐயனார், சந்திரன் சிலைகள் உள்ளன. நவகிரகத்தில் சூரியனும் சந்திரனும் மேற்கு நோக்கி ஒரே நேர்கோட்டில் உள்ளார்கள். அருகில் காசி விஸ்வநாதர் அம்பிகை, காலபைரவர், சூரியன் சந்திரன் ஆகியோரும் உள்ளனர். இறைவன்- திருமேனியழகியனாதர் இறைவி- சௌந்தரநாயகி
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°6'17"N   79°37'31"E
  •  203 கி.மீ
  •  203 கி.மீ
  •  273 கி.மீ
  •  324 கி.மீ
  •  427 கி.மீ
  •  460 கி.மீ
  •  473 கி.மீ
  •  483 கி.மீ
  •  499 கி.மீ
  •  571 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago