sree AthithEswarar temple, kaLapAl,kOvilkaLappAl (Kalappal) | கோவில், சிவன் கோயில்

India / Tamil Nadu / Thiruthuraipundi / Kalappal / திருத்துறைபூண்டி சாலை
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT077 kaLandhai1 - sree prabAnAyaki samEtha sree AthithEchwarar temple, kaLanthai or kaLandai now called as kOyilkaLapAl is 77th thEvAra vaippu temple.
TvspT - sree azhagiyanAtha swAmy temple,kaLappAl is one of the thiruvisaippA temples, temples which got holy hymns from sree karuvoorthEvar.AvrT / MukT - avathAra and mukthi thalam of sree kootruva nAyanAr.
shaivam.org/siddhanta/sp/spt_t_kalandai_aditteccaram.ht...
இத்தலம் மக்கள் வழக்கில் களப்பால் என்றும் கோயில் களப்பால் என்றும் வழங்குகிறது. ஊர் - களப்பால்; கோயில் - ஆதித்தேச்சரம்.
களப்பாளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்த ஊராதலின் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும். இது மருவி களந்தை என்றாயிற்று.

இக்கோயில் விசயாலய சோழனின் மகன் ஆதித்தசோழன் (கி.பி. 850 - 890) கட்டுவித்தது. எனவே ஆதித்தேச்சரம் என்று பெயர் பெற்றது.இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும்.
இஃது சுந்தரர் வாக்கில் இடம்பெற்ற வைப்புத் தலமுமாகும்.
இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் ஒருவரான கருவூர்த்தேவர் திருவிசைப்பா பாடியுள்ளார்.
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
முற்றியாற்றின் கரையில் அமைந்த தலம். இங்கு அழகியநாதசுவாமி கோயில், கயிலாயநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் உள்ளன. இவற்றுள் அழகியநாதசுவாமி திருக்கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும்.

அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டிய மன்னன் குலசேகரனின் கல்வெட்டு இத்தலத்து இறைவனை 'களப்பால் உடையார், ஆதித்தேச்சரமுடையார்' என்று குறிப்பிடுகிறது. (களப்பால் என்பது களந்தை என்று மருவிவரும். ஆதலின் இதுவே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும். இக்கோயிற் பதிகத்தில் அழகர் என்ற சொல்லால் இறைவனைக் குறிப்பது இதற்குரிய சான்றாகிறது

கோயிலுள் கூற்றுவ நாயனாரின் மூலவுருவம் உள்ளது.
"கூற்றுவன் - களப்பாளன்", களப்பால் என்னும் சிவதல (திருவிசைப்பா) நகரத்தை உண்டு பண்ணித் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர். சிறந்த சிவபக்தியும் வீரமும் உடையவர். மூவேந்தர்களை வென்று சபாநாயகப் பெருமான் திருவடினை முடியாகச் சூடிக்கொண்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பெயர் களந்தையாண்டான், களந்தையாளி, களந்தையுடையான், களப்பாளி என்று வழங்குகிறது.

இவரை "ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன், அடியேன்" என்று போற்றுகிறது திருத்தொண்டத் தொகை.

நாடுகளைப் பல கூற்றங்களாகப் பிரித்த காரணத்தால் கூற்றுவன் என்ற சிறப்புப் பெயர் வந்தது

கோயில் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு பொலிவுடன் உள்ளது. உயர்ந்து நிற்கும் கருவறை விமானம் விநாயகர் முருகன், மகாலட்சுமி என சிற்றாலயங்கள் உள்ளன.

வடகிழக்கில் சில லிங்கபாணங்கள் மற்றும் பைரவர் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°32'32"N   79°33'9"E
  •  140 கி.மீ
  •  151 கி.மீ
  •  218 கி.மீ
  •  278 கி.மீ
  •  365 கி.மீ
  •  398 கி.மீ
  •  416 கி.மீ
  •  421 கி.மீ
  •  438 கி.மீ
  •  514 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago