ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் ஆலயம், திருப்புட்குழி (Thirupputkuzhi)

India / Tamil Nadu / Kanchipuram / Thirupputkuzhi
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

TNDD057, DD057 - ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீவிஜயராகவ பெருமாள் ஆலயம், திருப்புக்குழி தொண்டைநாட்டு திவ்யதேசம் 57. தீர்த்தம் :ஜடாயு தீர்த்தம். விமானம் : விஜய வீர கோட்டி விமானம்.திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல்! PT Childboon - குழந்தை வரம் கொடுக்கும் அற்புத தலம்.
இங்குள்ள மரகதவல்லி தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் தாயார் என அழைக்கப்படுகிறார்.எனவே, குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். PT pithru dhosha nivarthi - பித்ரு தோஷம் நீக்கக்கூடிய தலம்,ராமபிரானே இங்கு ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால்,முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று.அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம்,இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது. மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
temple.dinamalar.com/New.php?id=261
Location:சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ., தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ தூரத்திலும் உள்ள பாலுரெட்டிசத்திரத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°52'20"N   79°37'7"E
  •  61 கி.மீ
  •  399 கி.மீ
  •  527 கி.மீ
  •  580 கி.மீ
  •  631 கி.மீ
  •  662 கி.மீ
  •  665 கி.மீ
  •  936 கி.மீ
  •  950 கி.மீ
  •  1063 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago