ஸ்ரீதாலபுரீஸ்வரர் & ஸ்ரீக்ருபாபுரீஸ்வரர் ஆலயம், பனங்காட்டூர், திருப்பனங்காடு (திருப்பனங்காடு)

India / Tamil Nadu / Dusi / திருப்பனங்காடு
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNT09 - ஸ்ரீஅமிர்தவல்லி சமேத ஸ்ரீதாலபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீக்ருபாநாயகி சமேத ஸ்ரீகிருபாபுரீஸ்வரர் ஆலயம், வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு 9வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.இக்கோயிலில் முதலில் அகத்தியர் வழிபட்ட தாலபுரீஸ்வரரையே முதலில் தரிசிக்க வேண்டும்.பிறகு புலஸ்தியர் வழிபட்ட க்ருபாபுரீசரை வணங்குதல் வேண்டும்.தல விநாயகர் பெரிய விநாயகர்.சுந்தரரிடம் இறைவன், 'நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய் இருப்பவன்', என்றருளியமையாலும், புறவார் பனங்காட்டூரினின்றும் வேறுபாடறியவும் இத்தலத்தை 'வன்பார்த்தான் பனங்காட்டூர் ' என்று சுந்தர் பாடியுள்ளார். பனைமரக்காடாக இருந்தமையால் 'பனங்காடு' (தாலவனம்) என்று பெயர் பெற்றது.வன்பாக்கம் என்னும் ஊர் - இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ளது. அதுவே இன்று வெண்பாக்கம், வெம்பாக்கம் என்று வழங்குகின்றது. (இது பாடல் பெற்ற தலமன்று. திருப்பனங்காடு தான் பாடல் பெற்றது.)PT Childboon - குழந்தை வரம் கொடுக்கும் அற்புத தலம்,குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், மேலும், சுவாமியை வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும்.
HFeeT - இறைவர்தம் பொற்பதங்கள் தோய்ந்த திருத்தலம் மற்றும் PT Food/Annadhosham - உணவு தொடர்பான அனைத்து தோஷங்களையும் போக்கும் தலம்,சுந்தரருக்கு இறைவன் (கட்டமுது) உணவளித்த வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. இது செவி வழிச் செய்தியே. பெரியபுராணத்தில் இல்லை. இறைவன் அப்போது தன் பாதத்தால் கிளறி உண்டாக்கிய தீர்த்தமே 'ஊற்று தீர்த்தம்' (ஊற்றங்குழி) என்று பெயர் பெற்றதென்று சொல்லப்படுகிறது.
temple.dinamalar.com/New.php?id=144
shaivam.org/hindu-hub/temples/place/170/thiruvanparthan...
அமைவிடம்:காஞ்சிபுரத்திலிருந்து கலவை, பெருங்கட்டூர் செல்லும் பேருந்தில் சென்று திருப்பனங்காடு கூட்ரோடில் இறங்கி (திருப்பனங்காடு செல்லும் பாதையில்) 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 044 - 24312807, 9843568742
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°48'5"N   79°36'51"E
  •  67 கி.மீ
  •  407 கி.மீ
  •  535 கி.மீ
  •  588 கி.மீ
  •  639 கி.மீ
  •  670 கி.மீ
  •  672 கி.மீ
  •  944 கி.மீ
  •  957 கி.மீ
  •  1070 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago