உமாபதி சிவம் குருமூர்த்தம் கோயில் (சிதம்பரம்)

India / Tamil Nadu / Annamalainagar / சிதம்பரம் / Rajendran salai

சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் ""கொற்றவன்குடி'' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வரலானார் உமாபதி சிவம்.
அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்து உதவினார். நாளடைவில் இம்மடம் ""கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்'' எனப் பெயர் பெற்றது.

ஸ்ரீஉமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது

.உமாபதி சிவாசாரியர், சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் முக்கியமானவர். நாயன்மார்களுக்குப் பின் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராக இவர் விளங்குகிறார். சைவர்களால் சந்தான குரவர்கள் என போற்றப்படும் நால்வருள் இவரும் ஒருவர்.

மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும், சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் சிறிதும் பெரிதுமான எட்டு13 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்த இவர் சிதம்பரத்திலே தில்லைவாழ் அந்தணர் மரபில் பிறந்தவர். இவர் மெய்கண்ட தேவரின் மாணவரான மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர். நூல்களை இயற்றியவர் இவரே.

சிதம்பரம் கோயிலில் பூசை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். இவர் தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டார். இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து நீக்கியதுடன் கோயிலில் பூசை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். அடுத்த தடவை கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வந்தபோது அதற்கான உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம்.

அப்போதுநடராசபெருமான் தான் உமாபதி சிவத்தின் பூசை பெட்டகத்தில் இருப்பதாக உண்மை உணர்ந்த அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனராம். அச் சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி ஏறாதிருந்த கொடியை ஏற்றி வைத்தாராம். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் கொடிக்கவி என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.

ஒருமுறை பெத்தான்சாம்பான் தில்லைக் கூத்தப்பெருமான் கோயிலுக்கு விறகு வெட்டிக் கொணர்ந்தளிக்கும் தொண்டு புரிந்தவன். அவனது பக்குவம் கண்டு நடராசப் பெருமான் உமாபதி சிவத்திற்குக் கடிதம் அனுப்பி அவனுக்கு முத்தி கொடுக்கக் கட்டளையிட்டார். உமாபதி சிவம் அங்ஙனமே செய்தனர்.

அவனது மனைவி அரசனிடம் சாமியார் தன் கணவனைக் கொன்று விட்டார் என்று முறையிட்டபோது, அரசனே நேரில் வந்து உமாபதிசிவத்தைக் கேட்க, அவர் நடந்ததைக் கூறித் தீட்சையின் பெருமையை விளக்கி அவன் முன் முள்ளிச் செடிக்கும் தீட்சை செய்து முத்தி கொடுத்தார். இதுவே பெத்தான்சாம்பான் முத்தி பெற்ற வரலாறு.

இவ்வாறு பல இறைப் பணிகளையும், அறப் பணிகளையும் செய்து, பல நூல்களையும் இயற்றி அருள்புரிந்த இம் மகான், ஒரு சித்திரை மாத ஹஸ்த நட்சத்திரத்தில் கொற்றவன்குடி திருமடத்தில் முக்தி பெற்றார்.
"கொற்றவன் குடி' திருமடத்தில் ஸ்ரீ உமாபதி சிவத்தின் குருமூர்த்தம், தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் திருமேனி தாங்கி விளங்குகிறது. மகா மண்டபத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீமுருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ நடராஜர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

அர்த்த மண்டபத்தில் ஸ்ரீஉமாபதி சிவத்தின் பஞ்சலோக உற்சவத் திருமேனியை தரிசனம் செய்யலாம். திருமுதுகுன்றத்தின் (விருத்தாசலம் ஸ்ரீகுமாரதேவர் திருமடம்) கட்டுப்பாட்டில் உள்ள இந்த மடத்தில் நாள்தோறும் நித்திய பூஜைகள் நடக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரத்தில் குருபூஜையும், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் மகா குருபூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன.

அன்பர்கள் வருகை புரிந்து, தவத்தில் சிறந்த ஸ்ரீ உமாபதி சிவத்தின் அருளைப் பெறலாம்!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°23'38"N   79°42'18"E
  •  208 கி.மீ
  •  560 கி.மீ
  •  677 கி.மீ
  •  745 கி.மீ
  •  796 கி.மீ
  •  805 கி.மீ
  •  827 கி.மீ
  •  1101 கி.மீ
  •  1110 கி.மீ
  •  1194 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago