ஸ்ரீதளிகேஸ்வரர் ஆலயம், பள்ளி அக்கிரகாரம் , லக்ஷ்மிராயபுரம்

India / Tamil Nadu / Thanjavur /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீகுபேரபுரீசர் இக்கரை என்றால் ஸ்ரீதளிகேஸ்வர ஸ்வாமி வெண்ணாற்றின் அக்கரையில்.மிக மிக க்ஷீணமான நிலையில் இருக்கிறது ஆலயம். மதமாற்ற அரசியலின் பின்னணியில் பாழ்பட்ட எண்ணற்ற ஆலயங்களுள் இதுவும் ஒன்றாகி நிற்கிறது. "மதசார்பற்ற.." என்ற வார்த்தையே ஏமாற்று வேலை என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது இவ்வாலயம்.இறைவன் காணக் கிடைக்காத அற்புதமான அழகிய சிவந்த திருமேனி.அம்பாளும் வரப்ரசாதியாகத் திகழ்கிறாள்.VJT - மழை பெய்ய வருணஜபம் செய்ய சிறந்த தலம்,இக்கோவிலில் அபூர்வமாக வருண பகவானின் மிகப்பெரிய மூர்த்தி (இன்னும்) இருக்கிறது..ஆன்றோர் ஆராய்ந்து நன்மை நடக்க வழி செய்யலாம்.
சண்டேஸ்வரருக்கு தனிச் சந்நிதி,, ஆனால் அதன் நிலையைப் பார்த்தால் அந்தக் கல்லும் கரைந்து விடும்.ஆனால் பிரம்மாண்டமான நந்திகேசர் மட்டும், "தருமநந்தியாக இந்த தர்மத்திற்கு நானிருக்கிறேன்.., கவலையை விடு.." என்பதை போல மிகக் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.ஆலயத்தை கவனித்துக் கொள்வது மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் மனைவியின் ஏழாவது தலைமுறை.மன்னர் பரம்பரை என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்,அத்தனை ஏழ்மை.அந்த பாழடைந்த சிறிய அரண்மனை போன்ற அவர்கள் வீடு மட்டுமே அவர்கள் மன்னர் பரம்பரை என்று சொல்லாமல் சொல்கிறது. ஆனால் அன்றாட வாழ்க்கை கூட சிரமம் என்ற நிலையில் அவர்களைப் பண்ணி வைத்து இருக்கிறது நமது திராவிட சொம்புகளின் மதமாற்ற அரசியல்.தஞ்சை மாமணிக் கோவில் செல்வோர், குபேரபுரீசர் அருள் நாடிச் செல்வோர் அருகிலேயே இருக்கும் இவ்வாலயம் சென்று ஆலயம் பொலிவு பெற வழி செய்யுங்கள். தஞ்சை மாமணிக் கோவில் செல்வோர், குபேரபுரீசர் அருள் நாடிச் செல்வோர் அருகிலேயே இருக்கும் இவ்வாலயம் சென்று ஆலயம் பொலிவு பெற வழி செய்யுங்கள்.
இவ்வாலயம் செல்ல உங்களுக்கு ஒரு தூண்டுதலாக இந்த விஷயம் இருக்கக் கூடும்.வெற்றிவேல் திரைப்படத்தில் வரும்" ஒன்னப் போல ஒருத்தன நா பாத்தது இல்ல..." என்ற பிரபலமான பாடல் காட்சியாக்கப்பட்ட திருத்தலம்(!) இது.(எல்லாம் காலம்..!!)
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°49'3"N   79°8'26"E
  •  166 கி.மீ
  •  203 கி.மீ
  •  267 கி.மீ
  •  331 கி.மீ
  •  401 கி.மீ
  •  434 கி.மீ
  •  457 கி.மீ
  •  460 கி.மீ
  •  474 கி.மீ
  •  559 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago