கத்திரிநத்தம் சிவன் கோயில்

India / Tamil Nadu / Thanjavur / Punnainallur road
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

தஞ்சாவூர் அருகே உள்ள கத்திரிநத்தம் என்னும் சிற்றூர் தஞ்சை- அம்மாபேட்டை சாலையில் புன்னை நல்லுரின் தெற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது.
சாபம் பெற்று தொழு நோயால் பீடிக்கப்பட்ட சப்த ரிஷிகள் பல தளங்களுக்கு சென்றுவிட்டு இறுதியில் இத்தளம் வந்து கோயிலின் எதிரில் இருக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து இத்தல சிவனை வணங்கிட தொழு நோய் தீர்ந்தது. அது முதல் இவ்வூர் சப்தரிஷி நத்தம் எனப்பட்டது

சப்தரிஷிநத்தம் எனப்பட்ட இவ்வூர் தற்ப்போது கத்திரி நத்தம் என் அழைக்கின்றனர்.இக்கோயிலிலுள்ள மூலவர் காளகஸ்தீஸ்வரர் ஆவார். மூலவர் சன்னதியின் முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. அருகே பைரவர், நாவுக்கரசர் சிலைகள் உள்ளன.

. கருவறையைச் சுற்றி வெளியே அமைந்துள்ள திருச்சுற்றில் கன்னிமூலை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, கால பைரவர், நவக்கிரகம், சனீஸ்வரன் ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

மூலவர் சன்னதியின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. இங்குள்ள அம்மன் ஞானாம்பிகை ஆவார். அம்மன் சன்னதியின் கருவறை கோஷ்டத்தில் வைஷ்ணவி, பிராமணி, இந்திராணி உள்ளன

பைரவர தெற்கு நோக்கியபடி உள்ளார். நவகிரகம் உள்ளது.

தஞ்சை மராட்டியமன்னன் துக்கோஜி இக்கோயிலுக்கு இருபது வேலி நிலம் தானம் தந்தது கல்வெட்டில் உள்ளது
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°46'14"N   79°12'19"E
  •  161 கி.மீ
  •  194 கி.மீ
  •  259 கி.மீ
  •  322 கி.மீ
  •  395 கி.மீ
  •  428 கி.மீ
  •  451 கி.மீ
  •  453 கி.மீ
  •  468 கி.மீ
  •  551 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago