எரவாஞ்சேரி சிவன் கோயில் (Eravancherry)

India / Tamil Nadu / Tharangambadi / Eravancherry / sankaranpanthal road
 கோவில், சிவன் கோயில், திருமால் கோவில், Durga temple (en)

கீழ்மாத்தூர்- சங்கரன்பந்தல் சாலையில் சங்கரன்பந்தல் அருகில் உள்ளது எரவாஞ்சேரி

அக்காலத்தில் இறையவன் சேரி என வழங்கப்பட்டு தற்ப்போது எரவாஞ்சேரி எனப்படுகிறது.

இவ்வூரின் மையத்தில் உள்ளது கிழக்கு நோக்கிய சிவன், பெருமாள் கோயில்கள் இரண்டுக்கும் நடுவில் துர்க்கை கோயில் பெரியதாய் அமைந்துள்ளது. இது போன்றதொரு அமைப்பு வேறு ஊர்களில் காண இயலாது.

எரவாஞ்சேரி எனும் பெயர் கொண்ட ஊர்கள் பல அமைந்துள்ளன என்றாலும் ஆதி சக்தி எனப்படும் துர்க்கை கோயிலின் இருபுறமும் மாலும், சிவனும் இருப்பது சிறப்பு..
இறைவன் சந்திரசேகரர் இறைவி பார்வதி இருவரும் கிழக்கு நோக்கி தனி கருவறைகளில் அருள் தருவதனை காணலாம்.

இவை மட்டுமன்றி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரும் கிழக்கு நோக்கிய சிற்றாலயங்களில் உள்ளனர். இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் சண்டேசர்

வடகிழக்கில் நவகிரகம் தனி மண்டபத்தில் மேற்கு நோக்கியதனி மண்டபத்தில் ஒரு லிங்கம் அம்பிகை, பைரவர், சனி ஆகியோர் உள்ளனர்.
வளாகத்தின் தென் புறம் சிறிய பெருமாள் கோயில் அதை ஒட்டி அனுமன் சன்னதி ஆகியவை உள்ளன.

பெரிய வைணவ ஆலயம் இருந்த அஸ்திவார கட்டுமானத்தினை திரு. தமிழவாணன் அவர்கள் நமக்கு காட்டினார்கள். நடுவில் பெரிய விமானத்துடன் துர்க்கை ஆலயம் கையில் சங்கு சக்கரம் கொண்டு இருக்கும் விஷ்ணு துர்க்கை வடிவம் கொண்டவளின் சன்னதி உள்ளது

. அனைத்து விழாக்களும் மக்களின் பங்களிப்போடு நடைபெறுகிறது.

கோயிலின் பின்னால் பெரிய தாமரை குளம் உள்ளது இதற்க்கு பெருமாள் குளம் என பெயர் இதில் இறப்புக்கு நீர் எடுப்பார் ஆனால் இறப்பு சடங்கு முடித்து குளிக்க மாட்டார்கள்,

தெற்கில் சிவன் குளம் உள்ளது அதில் நீர் எடுக்க மாட்டார்கள் ஆனால் சடங்கு முடித்து குளிக்க செல்வார்கள்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°1'38"N   79°45'16"E
  •  190 கி.மீ
  •  199 கி.மீ
  •  260 கி.மீ
  •  310 கி.மீ
  •  418 கி.மீ
  •  451 கி.மீ
  •  462 கி.மீ
  •  474 கி.மீ
  •  490 கி.மீ
  •  559 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago