ஸ்ரீவீரட்டேஸ்வரர் ஆலயம். திருப்பறியலூர், கீழப்பரசலூர்,

India / Tamil Nadu / Mayiladuthurai /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN041 - ஸ்ரீஇளங்கொம்பனையாள் சமேத ஸ்ரீதக்ஷபுரீஸ்வரர் திருக்கோவில், பறியலூர் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 41வது தலம்.AtVT - அட்டவீரட்ட தலங்களுள் தக்ஷ சம்ஹாரம் நிகழ்த்திய தலம்.TPuT - திருப்புகழ் திருத்தலம்.இங்கு அர்த்தசாம வழிபாடு பைரவருக்கு நடத்தப்படுகிறது.BrVT - ஸ்ரீபைரவ விஷேசத் தலம், தக்ஷனை அழித்த வீரபத்திரருக்கு இங்கு அர்த்த சாம பூஜை நடக்கிறது. மக்கள் வழக்கில் கீழப் பரசலூர் என்று வழங்குகின்றது. தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும் இஃது வழங்கலாயிற்று. கருவறைச் சுவரில் தக்கன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது.மூலவர் பெரிய திருமேனி - சுயம்பு மூர்த்தி - சதுர ஆவுடையார்; கோமுகம் மாறி உள்ளது.இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒன்பதும் இல்லை. சூரியன் மட்டுமே உள்ளார்.
அமைவிடம்: மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில் 'செம்பொன்னார் கோயிலை' அடைந்து, அவ்வூர் மெயின் ரோட்டில் 'நல்லாடை' என்று கைகாட்டி காட்டும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று, 'பரசலூர் ' சாலையில் திரும்பி 2 கி. மீ. செல்லவேண்டும். (இப்பாதை குறுகலான ஒருவழிப் பாதை)
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°5'25"N   79°43'32"E
  •  198 கி.மீ
  •  204 கி.மீ
  •  268 கி.மீ
  •  317 கி.மீ
  •  425 கி.மீ
  •  458 கி.மீ
  •  469 கி.மீ
  •  481 கி.மீ
  •  497 கி.மீ
  •  567 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago