ஸ்ரீ கடைமுடிநாதர் திருக்கோவில், கீழையூர், திருக்கடைமுடி

India / Tamil Nadu / Vaithiswarankoil /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

NCN018 - ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அந்திசம்ரக்ஷணீஸ்வரர் திருக்கோவில், கிளுவையூர் எனும் கீழூர் சோழ நாடு காவிரி வடகரைத் தேவாரத்தலங்களுள் 18வது தலம். 'கிளுவை' தலமரமாதலால் கிழுவையூர் என்பது கீழையூர் என ஆயிற்று எனலாம்.திருக்கடைமுடிநாதர் எனும் இறைவரது திருப்பெயரே சொல்கிறதே, அந்திமக்காலத்திலும் அனைத்து உயிர்களுக்கும் நற்கதி நல்கும் தலைவன் என்று.MVT - மூலவர் விசேஷமாக பதினாறு பட்டைகளுடன் பதினாறு செல்வங்களும் அருளும்படியாகத் தரிசனம் தருகிறார்.மக்கள் வழக்கில் கீழையூர் என்றும் கீழூர் என்றும் வழங்குகிறது. (கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்ந்து - மிகப் பெரிய ஊர். இதனால் இதற்கு ஏழூர் என்றும் பெயர் வழங்குகிறது. திருச்சென்னம்பூண்டி - என்னும் ஊரே கல்வெட்டின்படி கடைமுடி என்பர் ஆய்வர்.பிரமன், கண்வமகரிஷி முதலியோர் வழிபட்டதாக ஐதீகம்.காவிரி இங்கு வடக்கு முகமாகவந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
shaivam.org/siddhanta/sp/spt_p_kadaimudi.htm
temple.dinamalar.com/New.php?id=454
அமைவிடம்: மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில்; மேலையூர் மேலப்பாதி தாண்டி, கீழையூர் என்று பெயர்ப்பலகையுள்ள ஊரையும் கடந்து, சற்று மேலே சென்று 'சத்திரம் Stop' என்னுமிடத்தில் கீழையூர் 2 கி.மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று, கீழையூர் பேருந்து நிற்குமிடத்தில் இடப்பால் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°7'42"N   79°44'48"E
  •  201 கி.மீ
  •  209 கி.மீ
  •  271 கி.மீ
  •  320 கி.மீ
  •  429 கி.மீ
  •  462 கி.மீ
  •  473 கி.மீ
  •  485 கி.மீ
  •  501 கி.மீ
  •  570 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago