ஸ்ரீவாகீஸ்வரர் ஆலயம்,பெருஞ்சேரி

India / Tamil Nadu / Mayiladuthurai / kiliyanur road
 கோவில், சிவன் கோயில்

ஸ்ரீஸ்வதந்திர நாயகி சமேத ஸ்ரீவாகீஸ்வரர் ஆலயம், பெருஞ்சேரி.வாகீஸ்வரி எனும் சரஸ்வதி வணங்கியதால் வாகீசர்.48,000 மகரிஷிகள் தவம்செய்து பேறுபெற்ற தாருகாவனம் என்னும் தலம் தான் இன்றைய பெருஞ்சேரி.
தாருகாவனத்தில் விழுந்தது. NvPT Guru - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் சம்பந்தமான தோஷங்களுக்கு, ப்ரகஸ்பதியான குரு பகவான் வணங்கிய தலம்.மார்கழி மாதம், பூச நட்சத்திரம், வியாழக்கிழமை ஆகிய மூன்றும் இணைந்த நன்னாளில், வியாழனை தேவர்களுக்கெல்லாம் குருவாக ஈசன் இத்தலத்தில் நியமித்தார்.PDMT - மயிலாடுதுறை அருகே உள்ள பஞ்சதக்ஷிணாமூர்த்தி தலங்களுள் இவர் வாக்கு நல்கிய வள்ளல்.இங்குள்ள சிவகுருவே நான்கு திக்கிலும் நான்கு வள்ளல்களாக அருள்பாலிக்கிறார்.நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், பெருஞ்சேரி சிவன்கோயில்.BrST - பைரவர் சிறப்புத் தலம்,கிழக்குப் பிராகாரத்தில் நான்கு யுகங்களைக் குறிக்கும் நான்கு பைரவர் திருமேனிகள் உள்ளன..வீரபத்திரர் யாகத்தைச் சிதைத்துக் கொண்டிருந்தபோது, பிரம்மனின் தலையில் இடி விழுந்ததுபோல் குட்டினார். பிரம்மன் பூமியில் விழுந்தார். அருகே நின்ற சரஸ்வதியின் மூக்கினை அறுத்தார். பிரம்மனின் சொல்படிபெ ருஞ்சேரி வந்து பல ஆண்டுகள் தவமிருந்து வாகீஸ்வர சுவாமியை வழிபட்ட சரஸ்வதி இழந்த மூக்கைப் பெற்றாள். வாக்கு வண்மையளிக்கும் பேறையும் பெற்றாள். இப்படி கல்விக்கு அரசியான சரஸ்வதிதேவிக்கு அருள்புரிந்தவர்தான் பெருஞ்சேரி வாகீஸ்வரர்.உள்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பமும் மிக அற்புதமாக அமைந்துள்ளது.மேற்கு திருமாளிகை பத்தியில் ஞான தீர்த்த விநாயகரும்,பதினைந்து நாகர்கள் சிலைகளும், சந்திரன் வழிபட்ட சோமநாதரும் சோமசுந்தரியும், விசுவநாதர் விசாலாட்சியும் உள்ளனர்.BStarT - பிறந்த நட்சத்திர கோவில், பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலம், "ஆசை நிறைவேறணும்னா பூசத்திலே வழிபாடு செய்' என்ற பொன்மொழிக்கேற்ப, ஜாதகம் இல்லாதவர்கள்கூட பூச நட்சத்திர நாளில் இங்குள்ள சிவகுருவாம் ஆதிகுருவை வழிபட்டால் அனைத்து காரியங்களும் காலதாமதமாகாமல் நடந்து தடையின்றி வெற்றிகிட்டும்.
அமைவிடம்:மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் எட்டு கிமி தூரத்தில் பெருஞ்சேரி உள்ளது இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. மேலும் ரிஷி கோயில் எனும் பெயரில் ஒரு புத்தர் கோயிலும் உள்ளது.இவ்வாலயம் தவிர்த்து அருகில் ஸ்ரீ கங்காதரர் ஆலயமும் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°2'11"N   79°39'42"E
  •  195 கி.மீ
  •  197 கி.மீ
  •  264 கி.மீ
  •  316 கி.மீ
  •  419 கி.மீ
  •  452 கி.மீ
  •  465 கி.மீ
  •  475 கி.மீ
  •  491 கி.மீ
  •  563 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago