ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம்,திருஓத்தூர்,செய்யாறு (திருவத்திபுரம்)

India / Tamil Nadu / Tiruvethipuram / திருவத்திபுரம் / Sannathi street
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNT08 - ஸ்ரீபாலகுஜாலாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீசர் எனும் வேதநாதர் ஆலயம்,திருவோத்தூர் எனும் செய்யாறு 8வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.மக்கள் வழக்கில் திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. கோயில் உள்ள பகுதி திருவத்திபுரம் ஆகும்.ஓத்து - வேதம். VdRT - வேதநெறி விளங்க வணங்க வேண்டிய திருத்தலம், இறைவன் வேதத்திற்குப் பொருள் ஓதிய (சொன்ன) இடமாதலின் திருவோத்தூர்.TPuT - திருப்புகழ் திருத்தலம்,சேய்-முருகப் பெருமான் வணங்கியதால் செய்யாறு.'SrPT - சுவாமி மீது ரதசப்தமி அன்றும் மற்றும் தினமும் ஒன்பது வாயில்கள் தாண்டி சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.PT Childboon - குழந்தை வரம் கொடுக்கும் அற்புத தலம்,சம்பந்தர் பதிகம் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையாகி குலையீன்ற அற்புதப்பதி. இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது. வெளிநாட்டிலிருக்கும் பக்தர்கள் எல்லாம் கூட இந்த மரத்தின் பனம் பழத்தை வேண்டிக் கேட்டுப் பெறுகின்றதால் பல வெளிநாடுகளுக்கும்கூட அனுப்பப்பட்டு வருகிறது.MuVT - மூலவர் விசேஷம் கொண்ட தலம், மூலவர் மத்ஸய,கூர்ம, கஜபீடங்களின் மேல் பதினோரு தலை நாகம் குடைபிடிக்க காட்சி தருகிறார்.கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று ஒன்றாகக் காணலாம். ஒரே இடத்தில் நின்று
temple.dinamalar.com/New.php?id=519
shaivam.org/hindu-hub/temples/place/165/thiruvothur-ved...
Location: வந்தவாசி, திருவண்ணாமலை,போளூர்,ஆரணி முதலிய ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°38'55"N   79°32'23"E
  •  85 கி.மீ
  •  425 கி.மீ
  •  554 கி.மீ
  •  605 கி.மீ
  •  655 கி.மீ
  •  687 கி.மீ
  •  690 கி.மீ
  •  961 கி.மீ
  •  976 கி.மீ
  •  1088 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago