ஸ்ரீகுறுங்குடிநம்பி ஆலயம், திருக்குறுங்குடி

India / Tamil Nadu / Kalakkad /
 திருமால் கோவில், திவ்ய தேசங்கள்

PNDD089, DD089 - தாயார் மற்றும் குறுங்குடி நாச்சியார் சமேத ஸ்ரீஅழகியநம்பி'ஆலயம்,திருக்குறுங்குடி 89வது-உட்பிரிவு பாண்டியநாடு-திவ்யதேசம்.பஞ்சகேத விமானம்.வராஹ அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் "குறுங்குடி' ஆனது. குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு.திருமால் ஆகாயத்தை அளந்த போது திருவடி சதங்கையில் இருந்து சிலம்பாறு உண்டானது
ஏகாதசி விரதப் பெருமைச் சேத்திரம்! தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான். கோயில் மூலவரான அழகிய நம்பியை பார்க்க அனுமதிக்கபடாமல் போனதற்காக மிகவும் வருத்தப்பட்டார். அப்போது பெருமாள் கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்கு "தாமே" தரிசனம் தந்தார். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பதை நாம் இப்போதும் காணலாம்."வைணவ நந்தனார்!"
வைணவ கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும் அமைந்திருப்பது மிகச்சிறந்த அம்சமாகும்.பெருமாள் சந்நித்யில் பூஜை நடக்கும் போது சிவன் சந்நிதியில் பூஜை முடிந்து விட்டதா என்ற அர்த்தத்தில் "அருகில் இருப்பவருக்கு குறை ஏதும் உள்ளதோ?" என்று ஒரு பட்டர் கேட்டு, "ஏதும் குறை இல்லை" என்று மற்றொரு பட்டர் பதில் உரைப்பது இன்றும் கடை பிடிக்கப்படும் ஐதீகம் ஆகும்!!திருமங்கையாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்தது இத்தலம் தான்.
Location: திருநெல்வேலியிலிருந்து (42kms)நாகர்கோவில் செல்லும் பஸ்சில் வள்ளியூர் சென்று, அங்கிருந்து திருக்குறுங்குடி செல்லலாம். 
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°26'10"N   77°33'56"E
  •  37 கி.மீ
  •  73 கி.மீ
  •  83 கி.மீ
  •  127 கி.மீ
  •  180 கி.மீ
  •  238 கி.மீ
  •  267 கி.மீ
  •  285 கி.மீ
  •  295 கி.மீ
  •  309 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago