அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருகோஷ்டியூர் (திருகோஷ்டியூர்)

India / Tamil Nadu / Tirupathur / திருகோஷ்டியூர்
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

மூலவர் : சவுமியநாராயணர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : திருமாமகள்
தல விருட்சம் : -
தீர்த்தம் : தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்
விமானம் : அஷ்டாங்க விமானம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கோட்டியூர்
ஊர் : திருகோஷ்டியூர்

கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர்
செம்பொனார் மதில்சூழ் செழுங்கனி யுடைத் திருக்கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்றேத்து வார்களைக் கண்டக்கால்
எம்பிரான்தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வனே - sreeபெரியாழ்வார்!

தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் "திருக்கோட்டியூர்' என்று பெயர் பெற்றது.திருமண தடை நீக்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் "பிரார்த்தனை கண்ணனை" வணங்கி, விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம் கிடைத்து விடும்! "விளக்கு நேர்த்திக்கடன்" ஜகப் பிரசித்தம்!

ஆதிநரசிம்மத் தலம்! மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்..ஸ்ரீ ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் ( ஸ்ரீராமானுஜரின் குரு) வீடு இருக்கிறது. இந்த வீடு "கல்திருமாளிகை' என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம்.


temple.dinamalar.com/New.php?id=421
www.trsiyengar.com/id241.shtml

மதுரையிலிருந்து 62 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°3'39"N   78°33'36"E
  •  62 கி.மீ
  •  91 கி.மீ
  •  144 கி.மீ
  •  177 கி.மீ
  •  220 கி.மீ
  •  251 கி.மீ
  •  255 கி.மீ
  •  259 கி.மீ
  •  269 கி.மீ
  •  270 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 14 years ago