கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில்

India / Tamil Nadu / Nattarasankottai /
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

முற்காலத்தில் இவ்வூரில் வசித்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அய்யனார், தனது சிலை வடிவம் ஈச்ச மரக்காடான இங்கு இருப்பதாக உணர்த்தினார். அதன்படி, பக்தர் இங்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார். கோடரி வெட்டுப்பட்டு, சிலை கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக இவருக்கு வெட்டுடையார் அய்யனார் என்றே பெயர் ஏற்பட்டது. இவரை கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூஜித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் யந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு "வெட்டுடையார் காளி' என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே தலம் அழைக்கப்பெற்றது.யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க ”நாணயம் தவறியோர்க்கு நாணயம் வெட்டிப்போடு” என்று சொல்லும் வழக்கமும், அநியாயம் செய்யும் குற்றவாளிகளை அம்பிகை தண்டிப்பாள் என்ற நம்பிக்கையும் இங்கு உள்ளது.நம்பிக்கை துரோகம், பாதிப்பிற்க்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டி வழிபடும் வழக்கம் அரசு அனுமதியுடன் நடைபெறுகிறது.tawp.in/r/2wp5
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°50'37"N   78°35'11"E
  •  67 கி.மீ
  •  115 கி.மீ
  •  123 கி.மீ
  •  159 கி.மீ
  •  237 கி.மீ
  •  239 கி.மீ
  •  247 கி.மீ
  •  264 கி.மீ
  •  277 கி.மீ
  •  278 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago