ஸ்ரீவாலீஸ்வரர் ஆலயம்,குரங்கணில்முட்டம்

India / Tamil Nadu / Dusi /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNT06 - ஸ்ரீஇறையார் வளையம்மை.சமேத ஸ்ரீவாலீசர் ஆலயம்,திருக்குரங்கணில்முட்டம் வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம்; ஆதலின் இஃது குரங்கணில்முட்டம் என்ற பெயர்..அம்பாள் பெயரை இப்பகுதி மக்கள் 'இளையாளம்மன்' என்று அழைக்கின்றனர். கல்வெட்டில் இத்தலம் 'காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்' எனக் குறிக்கப்படுகிறது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்படுகிறார்.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம், சித்திரை மாதத்தில் இங்கு சூர்யபூஜை நடக்கிறது.PT chathru vinAsanam - எதிரிகள் அழிந்துபட வழிபட வேண்டிய கோயில்,ஸ்ரீமஹாவிஷ்ணு பிரயோக சக்கரத்துடன் அருள்பலிக்கிறார்.கோஷ்டத்து துர்காதேவியும் பிரயோக சக்கரமும்,இடக்கையில் சக்கர முத்திரையும் கொண்டுள்ளாள்.PT Childboon - குழந்தை வரம் கொடுக்கும் அற்புத தலம்,வளையம்மைக்கு வளையல் தந்து குழந்தை வரமும், சுகப்பிரசவமும் பெற்றுக் கொள்கிறார்கள் பக்தைகள்.MukT - முக்தி தரும் ஸ்தலம்,,சுந்தரர் பதிகத்தில் முக்தித்தலம் என்று குறிப்பிட்டுள்ளார்.NvPT sani - நவகிரக பரிகாரத் தலம், ஜாதகத்தில் சனி சம்பந்தமான தோஷங்களுக்கு, எமன் காக்கை வடிவில் வணங்கிய தலம்,எமன் சனிக்கு அதிதேவதையும் ஆவார்.
temple.dinamalar.com/New.php?id=1003
shaivam.org/hindu-hub/temples/place/159/thirukkurangani...
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் பாலாற்றைத் கடந்து, 'தூசி' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 09943295467.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°46'2"N   79°41'26"E
  •  65 கி.மீ
  •  409 கி.மீ
  •  535 கி.மீ
  •  592 கி.மீ
  •  643 கி.மீ
  •  671 கி.மீ
  •  674 கி.மீ
  •  949 கி.மீ
  •  960 கி.மீ
  •  1068 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago