திருமுண்டீச்சரம் கிராமம் (Thirumundeeswaram (Gramam))

India / Tamil Nadu / Viluppuram / Thirumundeeswaram (Gramam)

திருமுண்டீச்சரம் கிராமம் சிவலோகநாதர் கோயில் [[அப்பர்]] பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
சிவலோகநாதர் திருதலம் தென்பெண்ணை (மலட்டார்) கரையில் திருவெண்ணெய் நல்லூர் அருகில் 3கி.மீ கிழக்கில்(திருமுண்டீச்சரம் கிராமதில் ) உள்ளது கடலூர் திருக்கோவிலூர் திருவண்ணாமலை SH 68 நெடுன்சிசாலையில் அமையபட்டது, இவை விழுப்புரம் 10 கி.மீ தூரத்தில் சென்னை திருச்சிராப்பள்ளி NH 45 தேசியனடுன்சாலை மிகஅருகில் இத்திருதலம் அமையபட்டது,

மற்றும் (திருவெண்ணெய் நல்லூர் ரோடு ரயில் நிலையம் ) சிவலோகநாதர் கோவில் குறுநில மன்னர்கல்லால் கட்டபட்டது வரலாறு ...பாடல் பெற்ற தலங்கள் திருமுண்டீச்சரம் கிராமம் ....

எனப்படுபவை தேவாரத் திருமுறைகளைப் பாடிய சமயக் குரவர்களான சம்பந்தர், அப்பர் அல்லது சுந்தரரினால் தேவாரம் பாடப்பட்ட கோயில்கள் ஆகும். 276 தலங்கள் பாடல் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் இந்தியாவிலேயே அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மற்றும் (புதுச்சேரி மாநிலம் உட்பட) இவற்றில் 266 சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன. இலங்கையிலுள்ள திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகியனவும் பாடல் பெற்ற தலங்களாகும்.

ஆறாம் திருமுறை
பாடல் எண் : 1
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே.
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே...

பொழிப்புரை :
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், சினமிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவனும், அடியவர்களுக்கு அன்பனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடைமேல் கங்கையை ஏற்றவனும், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவனும், உலகங்கள் ஏழும் கலக்க முறாதபடி ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கழுத்திடத்தே சேர்த்தவனும் ஆவான். அவன் என் சிந்தை இடத்தவன் ஆயினான்.

பாடல் எண் : 2

கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக்
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்
ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே...

பொழிப்புரை :
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் தலைவன் ஆவானும், பிரமன் தலைகளில் ஒன்றைக் கோபித்துக் கொய்தவனும், வேகமாகப் பாய்ந்த கங்கை வேகம் நீங்கிப் பரவிய தலையை உடைய ஒருத்தனும் உமையம்மை தங்கிய பங்கினனும், மூன்று வடிவங்களாய் நின்ற அரி, அயன், அரன் ஆகியோருடைய வடிவங்கள் ஒன்றாகித் தனது ஒருவடிவமாக அமைந்த பழையோனும், தேவர்களுக்கெல்லாம் மேலானவனும், மெய்யடியார் உள்ளத்தில் விரும்பி உறையும் தூயவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான்

பாடல் எண் : 3

நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்
அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே...
பொழிப்புரை :
திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் நம்புதற்குரியவனும், வெள்ளை விடை ஒன்றை ஊர்தியாகக் கொண்டவனும், தலைவனும், கீதத்தைப் பாடினவனும், இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்கள் உடையவனும், விரும்பி மனமுருகும் அடியார்களுடைய அன்பனும், அனலேந்தி ஆடினவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் அறிய ஒண்ணாதவனும், செம்பொன் அனையானும் ஆவான். அவன் என் சிந்தை யிடத்தவன் ஆயினான்.

பாடல் எண் : 4

மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்
ஆரழலாய் அயற்கரிக்கு மறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே...
பொழிப்புரை :
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் மூவுருவாய் மூத்தவனும், மூவர்க்கும் முதல் ஆனவனும், உலகத்தோற்றத்திற்கு முன் ஆனவனும், உலக ஒடுக்கத்திற்குப்பின் ஆனவனும், வீடு பேறு ஆனவனும், உலகங்களைக் காப்பவன் ஆனவனும், உலகிற்குக் கண் ஆனவனும், இறந்துபட்ட பிரம விட்டுணுக்களுடைய என்புக்கூடுகளை அணிந்தவனும், கயிலை மலையினனும், ஆக்கந்தருபவனும், ஆன்ஐந்தில் விரும்பி மூழ்குபவனும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அறியமுடியாத அழற்பிழம்பாய்த் தோன்றிய தேவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

பாடல் எண் :5
கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே...


( இரா.ஜீவா)
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°51'0"N   79°24'16"E

கருத்துரைகள்

  •  169 கி.மீ
  •  515 கி.மீ
  •  641 கி.மீ
  •  694 கி.மீ
  •  743 கி.மீ
  •  775 கி.மீ
  •  776 கி.மீ
  •  1048 கி.மீ
  •  1066 கி.மீ
  •  1169 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago