ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்,பரிக்கல் (பரிக்கல்)
India /
Tamil Nadu /
Ulundurpettai /
பரிக்கல்
World
/ India
/ Tamil Nadu
/ Ulundurpettai
Bota / இந்தியா / தமிழ்நாடு / விழுப்புரம்
கோவில், இந்து கோவில்
ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டிய, நேர்கோட்டில் இருக்கும் மூன்று நரசிம்மத் தலங்களுள் மூன்றாவது தலம்.மற்ற இரண்டு சிங்கிரிகோவில் எனும் அபிஷேகப் பாக்கம் மற்றும் பூவரசன்குப்பம் நரசிம்மர் கோவில்கள்.ANrT - அஷ்ட நரசிம்மத் தலங்களுள் ஒன்று.VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆயிரம் ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.
அம்மன்/தாயார் : கனகவல்லி
மூலவர் : லட்சுமிநரசிம்மர்
தீர்த்தம் : நாககூபம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : பரகலா
ஊர் : பரிக்கல்
பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு என்று இங்கு வந்து பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கல்யாணத் தடை உள்ளவர்கள், வழக்கு வம்புகளில் சிக்கி இருப்பவர்கள், பில்லி சூன்யங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நல்ல தீர்வு கிடைக்கப் பெறுவார்கள்
தலப் பெருமை:
இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி மூர்த்தி உண்டு.இதிலிருந்தே நரசிம்மரின் உக்கிரம் முழுதும் தணிந்து வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் கிடைக்கும் என்பது நிச்சயம்.இங்கு பெருமாளை தாயார் ஆலிங்கனம் செய்துள்ளபடி இருப்பதால் இங்கு பெருமாள் மிகவும் சாந்தசொரூபமாக உள்ளார்.
வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர் ஒரு சேர உள்ளது இத்தலத்தின் முக்கிய சிறப்பாகும்.தினம் எள் எண்ணெய் தீபம் ஏற்றி நவதானியங்களை இவர்கள் முன் பரப்பி தங்கள் கோரும் பிரார்த்தனைகளை கையால் எழுதுகிறார்கள்.
இவ்வாலயத்தில் ஆஞ்சநேயமூர்த்திக்கு தனிச்சிறப்பு என்பதால் கருவறையில் பக்த ஆஞ்சநேயர் எழுந்தருளி இருக்கிறார்.அவர் மூலமாகவே ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மர் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஐதீகம்.ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரி இங்கும் வரதராஜ பெருமாள் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆயிரம் ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது வீரக்கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.பக்தர்கள் இக்கோல அனுமந்த மூர்த்தியை எங்கு கண்டாலும் நமது ஹிந்து தர்மத்திற்காக வேண்டிக் கொள்வதோடு விக்கிமேப்பிலும் 'VPAT' என்று குறிக்கலாம்.
தல வரலாறு:
வசந்தராஜன் என்ற மன்னன் யாகம் தொடங்கும் நேரத்தில் பரிகலாசூரன் என்ற அசுரன், யாகத்தை தடுக்க வருவதை அறிந்த குரு, வசந்த ராஜன் கையில் கங்கணம் கட்டி, "அராக்ஷ்ர அமிர்தாக்ஷ்ர' என்று தொடங்கும் மந்திரத்தை உபதேசத்து, அருகில் உள்ள புதறில் மறைந்து கொள்ள செய்தார். அப்போது அசுரன், வசந்தராஜனை கோடாரியால் தாக்க, உக்கிரமடைந்த நரசிம்மர்,பரிகலாசூரனை அழித்து வசந்தராஜனுக்கு காட்சி கொடுத்தார். பரிகலாசூரன் என்ற அசுரனை அழித்ததால், இத்தலம் பரிக்கல் எனப்படுகிறது.வசந்தராஜன் வேண்டுகோளின்படி இங்கு லட்சுமி தாயாருடன் இணைந்து சாந்த நரசிம்மராக அருள் பாலிக்கிறார். வசந்தராஜன் கட்டிய கோயிலுக்கு தேவசிற்பியான விஸ்வகர்மா லட்சுமி நரசிம்மர் சிலை செய்து கொடுத்தார். அதை குரு வாமதேவ ரிஷி பிரதிஷ்டை செய்தார். கோவிலின் வடமேற்கில் சக்கர தீர்த்தம் உள்ளது.
கோவில் நடை திறப்பு:காலை 6-12 மற்றும் மாலை 4-8.மார்கழி மாதத்தில் மட்டும் காலை 5மணிக்கு நடை திறப்பு.
அமைவிடம்:விழுப்புரத்தில் இருந்து கூவாகம் செல்லும் வழியிலேயே அமைந்துள்ளது ஸ்ரீபரிக்கல் நரசிம்மர் ஆலயம்.
www.indiastudychannel.com/resources/154094-Three-Lakshm...

அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 11°47'8"N 79°21'54"E
- ஸ்ரீ கனகவல்லித்தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ம சுவாமி திருக்கோவில், பரிக்கல் 0.1 கி.மீ
- திருநாவலேஸ்வரர் கோவில்(பக்தஜனேசுவரர் /ஜம்புநாதேசுவரர்/திருநாவலீசுவரர், திருக்கோயில்) 4.6 கி.மீ
- ஆமூர் சிவன் கோயில்- Amur sivan temple 8.2 கி.மீ
- NNT14 திருவெண்ணைநல்லூர் ஸ்ரீ வேற்கண்ணிநாயகி உடனுறை ஸ்ரீ தடுத்தாட் கொண்ட நாதர்ஆலயம், திருவெண்ணெய்நல்லூர், 8.4 கி.மீ
- திருமுண்டீச்சரம் கிராமம் 8.4 கி.மீ
- மாஷபுரீஸ்வரர் உளுந்தூர்பேட்டை சிவன் கோயில் 12 கி.மீ
- அய்யனார் கோவில் 16 கி.மீ
- T.கோபுராபுரம் சிவன்கோவில் , கவனை 24 கி.மீ
- Sengazhani Amman Kovil 24 கி.மீ
- Valasai Sivan Temple 26 கி.மீ
- ARUMUGAM CHINNATAMBI VEDU 4.5 கி.மீ
- P.KUPPAM 5.3 கி.மீ
- paramanatham 5.3 கி.மீ
- SILAMBU MANIVANNAN HOUSE T,V. NALLUR 7.6 கி.மீ
- T.N.SAKARAPANI NO.6 AYYANAR KOIL STREET THIRUVENNAINALLUR 7.9 கி.மீ
- ஓம் சக்தி மழலையர் பள்ளீ 8.4 கி.மீ
- ராஜா திருமண மண்டபம் 8.4 கி.மீ
- கனகா திருமண மண்டபம் கிருஷ்ணன் 9894071174 8.5 கி.மீ
- pachaiyappan house 11 கி.மீ
- R.PACHAIYAPPAN LAND 12 கி.மீ