Valasai Sivan Temple (Valasai)

India / Tamil Nadu / Ulundurpettai / Valasai / Mangalampettai-valasai road
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

வலசை போதல் என்பது புலம் பெயர்தலை குறிக்கும் சொல்லாகும். மக்கள் புலம்பெயர்ந்து இங்கு தங்கிய காரணத்தினால் இந்த பெயர் வந்திருக்கலாம்.

கடலூர் மாவட்டத்தின் வடமேற்கு எல்லை கிராமம் இதுவாகும். மங்கலம்பேட்டை- இடைசித்தூர் வலசை என வரவேண்டும்.

முந்நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த செங்கல் கட்டுமான கோயில், அரை ஏக்கர் பரப்பளவில் கோயிலும் அதன் வடகிழக்கில் ஒரு ஏக்கர் கொண்ட திருக்குளமும் உள்ளது. ஊருக்கு இளைத்தவன் சிவன் தான் தற்போது, அதனால் கோயிலுக்கும் குளத்திற்கும் நடுவே ஒரு நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டுள்ளது.

சிவ வழிபாடு செய்யும் சிறுபான்மை மக்கள் ஊரைவிட்டு சென்றுவிட கோயில் சிதைந்து கொண்டிருக்கிறது. கிழக்கு நோக்கிய இறைவன் அருகில் இடப்பாகம் கொண்டாற்போல அம்பிகையும் இடதுபுறம் கிழக்கு நோக்கிய தனி கோயிலில் உள்ளார். இறைவன்- விஸ்வநாதர் இறைவி- விசாலாட்சி
இறைவனது கருவறை பல சுண்ண சுதைகளால் நிறைம்பி உள்ளது. தென் புறம் தட்சணாமூர்த்தி மட்டும் சற்று முன்னிழுக்கப்பட்ட மண்டபத்தில் காட்சி தருகிறார். விநாயகர், முருகன் தனி சிற்றாலயங்களில் உள்ளனர்.

இறைவனுக்கு நேர் எதிரில் நீண்ட இடைவெளி கொண்டு நந்தி மண்டபம் உள்ளது அற்ப்புதமாய் வடிவமைக்கப்பட்ட நந்தியின் சிலை உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°36'14"N   79°12'41"E
  •  203 கி.மீ
  •  546 கி.மீ
  •  674 கி.மீ
  •  722 கி.மீ
  •  769 கி.மீ
  •  803 கி.மீ
  •  809 கி.மீ
  •  1075 கி.மீ
  •  1097 கி.மீ
  •  1204 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago