இறைஞ்சி ERANJI

India / Tamil Nadu / Ulundurpettai /

பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, கடைசி 18-ஆவது ஆண்டு அஞ்ஞாத வாசத்தின்போது இப்பகுதிக்கு வந்துள்ளனர். அஞ்ஞாத வாசத்தின்போது யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும் என்பதால், ஐவரும் சேர்ந்து மணிமுத்தாறு நதியில் குளித்து முடித்து, இங்குள்ள சிவலிங்கத்தை வணங்கி (இறைஞ்சி), பிறகு பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் இவ்வூர் இறைஞ்சி என்றும் எரஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. (பாண்டவர் கள் தங்கியதன் நினைவாக ஐவர்குடி என்ற ஊரும், அவர்கள் கஞ்சி காய்ச்சிக் குடித்த இடம் காய்ச்சிக்குடி என்ற பெயரிலும் இப்பகுதியில் உள்ளது.) பாண்டவர்கள் வழிபட்ட சிறப்புமிக்க சிவலிங்கம் பல நூற்றாண்டுகளுக்குமுன் மரத்தடியில் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. ஒரு நாள் மௌனகுரு ஒருவர் இவ்வூருக்கு வந்த தங்கினார். அவர் தினசரி மணிமுத்தாற்றில் குளித்து முடித்து இவ்விறைவனை வணங்கி வந்தார். ஊர் மக்களை அழைத்து, "இந்த இடத்தில் கோவில் எழுப்புங்கள்; ஊர் மக்கள் செழிப்படைவார்கள்' என்று சைகை மூலம் சொல்ல, அதன்படியே சிறிய அளவில் ஆலயம் எழுப்பப்பட்டது. அந்த மௌனகுரு ஒரு சித்தர். அவர் சிவலிங்கத்துக்கு கைலாசநாதர் என்றும், அன்னைக்கு காமாட்சி அம்மன் என்றும் பெயர் சூட்டினார்.
nakkheeran.in/users/frmArticles.aspx?A=11907
ta.wikipedia.org/s/3oj0
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°36'8"N   79°10'7"E
  •  205 கி.மீ
  •  547 கி.மீ
  •  676 கி.மீ
  •  722 கி.மீ
  •  770 கி.மீ
  •  803 கி.மீ
  •  811 கி.மீ
  •  1075 கி.மீ
  •  1098 கி.மீ
  •  1207 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago