ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம்,சோளிங்கர் (சோளிங்கர்)

India / Tamil Nadu / Sholingur / சோளிங்கர்
 வரலாற்று, திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TNDD064, DD064 - ஸ்ரீஅமிர்தபலவல்லித் தாயார் சமேத ஸ்ரீயோகந்ருஸிம்ஹர் ஆலயம், திருக்கடிகை எனும் கடிகாசலம் எனும் சோளிங்கர் 64வது திவ்யதேசம்.பிரிவு-தொண்டைநாடு.
மூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
உற்சவர் : பக்தவத்சலம், சுதாவல்லி
அம்மன்/தாயார் : அமிர்தவள்ளி
தல விருட்சம் : -
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
விமானம் : சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கடிகை, சோளசிம்மபுரம்
ஊர் : சோளிங்கர்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
"அக்காரக் கனி"யை அடைந்துய்ந்து போனேனே - திருமங்கையாழ்வார்!

யோகநரசிம்மர் எழுந்து அருளும் :சோளசிம்மபுரம்" என்பது மருவி சோளிங்கபுரம் என்றானது! இத்தலத்தில் ஒரு கடிகை (24நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.எனவே கடிகாசலம் என்றும் பெயர்! இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும்.தாம்பத்ய பிரச்சினை, குழந்தையின்மை, திருமணத்தடை, வியாபார நஷ்டம், பசி , மூப்புத் துன்பம், பிரம்மஹத்தி தோஷம் நீங்க, புது நிலம் வாங்க அல்லது புது வீடு கட்ட பக்தர்கள் வழிபாடு செய்து கஷ்டம் நீங்கப் பெறுகிறார்கள்.
500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். ஊரின் மையப்பகுதியில் உற்சவருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும் தான். இங்கிருந்து மலைக்கோயில் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது... பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனை(குளம்) நீரில் விதிப்படி மூழ்கிப் படிகளில் படுத்தக் கிடந்து வாயு குமாரனை நினைத்து எண்ணிய வரம் பெறலாம். ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

Location:வேலூர் - திருத்தணி வழியில் சோளிங்கர் இருக்கிறது. தவிர சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் சென்றடையலாம்.சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூர் நகர்களிலிருந்து பேருந்து வசதி நிறைய உண்டு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°5'19"N   79°25'20"E
  •  69 கி.மீ
  •  380 கி.மீ
  •  516 கி.மீ
  •  556 கி.மீ
  •  605 கி.மீ
  •  638 கி.மீ
  •  656 கி.மீ
  •  911 கி.மீ
  •  930 கி.மீ
  •  1057 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago