TNDD059, DD059, திருவள்ளூர், (திருவள்ளூர் - Thiruvallur)

India / Tamil Nadu / Tiruvallur / திருவள்ளூர் - Thiruvallur
 கோவில், திவ்ய தேசங்கள்

மூலவர் : எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
உற்சவர் : வைத்திய வீரராகவர்
அம்மன்/தாயார் : கனகவல்லி
தல விருட்சம் : -
தீர்த்தம் : ஹ்ருத்தாப நாசினி (மனத்தால் நினைத்தாலே பாவங்கள் போக்கும் தீர்த்தம்)
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : எவ்வுளூர், திருஎவ்வுள்
ஊர் : திருவள்ளூர்

தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும்
அன்று செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத்
தாளூருள எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே - திருமங்கையாழ்வார்!

சாலிஹோத்ரர் எனும் முனிவ ருக்கு காட்சி கொடுத்த பெருமான் யாம் எவ்வுள் கிடக்க என கேட்க தான் வசிக்கும் வீட்டையே காட்டியதால் திரு-எவ்வுளூர் என்று பெயராம்!வைத்திய வீரராகவர் - பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும்.குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம் - அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம்.இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை ரூ.300 .இத்தலத்தில் இந்த நேர்த்திகடன் மிகவும் விசேஷமானது.தாயாருக்கு 9 கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகும்.

Location: கோயில் திருவள்ளூர் நகரின் மத்தியில் இருக்கிறது.திருவள்ளூர் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவள்ளூர் சென்றடையலாம்.சென்னை தவிர தாம்பரம், திருவள்ளூர் , காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவள்ளூருக்கு பஸ் வசதி நிறைய உண்டு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°8'33"N   79°54'22"E
  •  18 கி.மீ
  •  364 கி.மீ
  •  487 கி.மீ
  •  552 கி.மீ
  •  605 கி.மீ
  •  623 கி.மீ
  •  634 கி.மீ
  •  909 கி.மீ
  •  915 கி.மீ
  •  1021 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago