sree neervanna perumal temple, thiruneermalai (சென்னை)

India / Tamil Nadu / Pammal / சென்னை
 திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

TNDD061, DD061 - sree animaamalar mangai sametha sree ranganathar temple, thiruneermalai is 61st dhivya dhesam located in thondainaadu.
மூலவர் : நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் உற்சவர் : - அம்மன்/தாயார் : அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி தல விருட்சம் : வெப்பால மரம் தீர்த்தம் : சித்த, சொர்ண, காருண்ய தீர்த்தம், சீர புஷ்கரிணி ( ஒரே தீர்த்தம் - நான்கு பெயர்கள்!) விமானம் : தோயகிரி விமானம் ஆகமம்/பூஜை : வைகானஸம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : நீர்மலை, தோயாத்ரிகிரி ஊர் : திருநீர்மலை (chennai) mangalAsAsanam by sreeboothaththAzhwAr and sreethirumangai aAzhwAr! அன்றாயர் குலக்கொடி யோடனிமா மலர் மங்கை யொடளப்பளாவி அவுணர்க் கென்றானு மிரக்க மில்லாதவனுக் குறையு மிடமாவது, இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மாமலையாவது நீர்மலையே - திருமங்கையாழ்வார்! நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது! இத்தலத்தின் குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் சித்தம் தெளிந்து, நோய் விலகி, குழந்தை பாக்கியம் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிபிரதட்சணம் செய்தும் வழிபடுகின்றனர். வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன.திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார். தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர். for more details temple.dinamalar.com/New.php?id=497 Location : சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் 5 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். aruLmigu vENeeswarar thirukkOyil, thirumudiwAkkam is near to this temple!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°57'47"N   80°6'53"E
  •  31 கி.மீ
  •  382 கி.மீ
  •  497 கி.மீ
  •  574 கி.மீ
  •  628 கி.மீ
  •  629 கி.மீ
  •  656 கி.மீ
  •  931 கி.மீ
  •  932 கி.மீ
  •  1023 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago