Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

Palaya Kayal

India / Tamil Nadu / Sayapuram /
 Upload a photo

Visit "Our Lady of Expectation"for women to conceive or bear a child.
Feast On 18 December.
Nearby cities:
Coordinates:   8°40'19"N   78°5'49"E

Comments

  • avmurugan
    Palayakayal
  • varatharajan (guest)
    its very nice village
  • A.Vinoth (guest)
    Now, Its a very beautiful village..... After Very very beautiful Down....
  • Mohamed Rafi.I (guest)
    Its An Historical Famous village.All Community Peopuls are Very Nice and Loveble with one another.
  • Anish (guest)
    Its a great village to live with harmony and peace each and every thing in the village is nice. it has a wonderfull mosque and big church.. a good school to study.. in future it will become as metro city as like as new york :-P
  • joemel fernando (guest)
    பழைய காயல் பாண்டியர்கள் கடல் வாணிகத்தில் மிகுந்த சிறப்புற்றிருந்தனர். காயல் துறைமுகத்தை வணிகத் தலைநகராய் கொண்டிருந்தனர். இவர்கள் ஆட்சிகாலத்தில் கோயில், கலை, தொழில், தமிழ்மொழி அனைத்தும் ஏற்றம் பெற்றன. பாண்டியர்தம் நாகரிகம் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா கல்வெட்டுகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். அராபியர்கள், காயலுக்கு வணிகம் செய்ய வருவதற்கு முன்னர் ஆதிகாலம் தொட்டு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவர்கள் முத்துக்குளித்தலில் தனி உரிமை பெற்றவர்களாக இருந்ததையும், பின்னர் மூர்கள் தொடங்கி ஆங்கிலேயர் வரை பரதவர்களை ஒட்டச் சுரண்டி முத்து வளத்தையே அழித்து, முத்துத் தொழில் இல்லாமல் போனது. ’’பேருலகத்துமே எந்தோன்றி சீருடை விழுச் சிறப்பின், விளைந்து முதிர்ந்த விழு முத்தின், இலங்குவளையிருஞ்சேரிக் கட் கொண்டிக் குடிப்பாக்கத்தும், நற்கொற்கையோர்,,” என்கிற மதுரைக் காஞ்சி பாடலின் மூலம் வீரமிக்க பரதவர்கள் முத்துக்களையும் சிப்பிகளையும் கடலில் மூழ்கியெடுத்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்ற போது அவருடைய ஆட்சியதிகாரத்திற்கு கட்டுப்படாமல் தனியாட்சி செய்து முத்துக்குளித்தலில் தனி உரிமை பெற்றிருந்த பரதவர்களை நெடுஞ்செழியப் பாண்டியன் போர் செய்து வென்று பரதவர்களை வீழ்த்தி விலையுயர்ந்த முத்துக்களால் செய்யப்பட்ட கழுத்தணி ஒன்றை எடுத்துக் கொண்டான் என்கிறது சிறுபாணாற்றுப் படை, பரதவர்களை வென்றபின் முத்தின் உரிமை பாண்டியர்களுக்கு செல்வதையும் அவர்கள் முத்தின் மீதும் சந்தனத்தின் மீதும் ஏகபோக உரிமை கொண்டிருந்தனர் என்றும் சங்கப்படால்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அது போன்று காவிரிப்பூம்பட்டினத்தையும் உறையூரையும் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள் கிபி-990- ல் பாண்டியர்களையும் வட இலங்கையையும் வெற்றி கொண்டு பேரரசு ஒன்றை நிறுவியதன் மூலம் கொற்கைக்குடா, மன்னார்வளைகுடா என முழு முத்துக்குளித்தல் உரிமையையும் எடுத்துக் கொண்டனர். நாளடைவில் கொற்கை தாமிரபரணி ஆற்றின் வண்டல் படிந்து பெரும்பகுதி நிலமாக மாறியதால், அதன் அருகில் உள்ள பழைய காயல் அதன் பின்னர் துறைமுகமானது. முத்துக்குளித்தலில் தனியுரிமை கொண்டவர்களாக இருந்த பரதவர்களிடமிருந்து பாண்டியர்கள் திறையாக முத்துக்களை வசூலித்துக் கொண்டு வணிகத்தை கட்டுப்படுத்தினார்களே தவிர முத்தெடுக்கும் பரதவர்களின் உரிமையை அவர்கள் பறித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் இந்த வரி வசூலிக்கும் விஷயத்தில் கறாரான அணுகுமுறையை பாண்டியர்கள் கொண்டிருக்க வேண்டும். முத்து வளம் குன்றிய போது. (முத்து வளம் என்பது காற்று, சூரிய ஒளி போன்ற காலச்சூழல் மாறுபாட்டிற்கு ஏற்ப மன்னாரிலும், கீழைக்கடலோரத்திலும் பருவத்திற்கேற்ப குன்றியும் செழித்தும் கிடைத்து வந்தது) பரதவர்களால் வரிச் செலுத்த முடியாமல் போன போது பாண்டியர்கள் பரதவர்கள் மீது போர் தொடுத்து அவர்களை அடக்கியும் உள்ளனர். முத்துக்குளித்தல் உரிமையிலும், வரி விதித்ததிலும் பாண்டியர்களும், சோழர்களும் ஒரே மாதிரியான அணுகுமுறையைக் பரதவர்கள் மீது கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் கரையோரங்களில் வாழ்ந்த பண்டை பரதவர்கள் மன்னர்களின் ஆளுகைக்குட்படாத தனி ஆட்சி முறையைக் கொண்டிருந்தனர். அவர்கள் சாதி தலைவர்களால், பட்டங்கட்டிகளால் ஆளப்பட்டு வந்தனர். இதை ஆட்சி முறை என்று புரிந்து கொள்வதை விட மன்னராட்சி நிலப்பரப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்ட ஒரு கடலோர இனமாக பரதவர்கள் உள்ளிட்ட எல்லா கடலோரச் சமூகங்களுமே இருந்திருக்க வேண்டும். அதை பரதவர்களின் சாதித் தலைவர்களாக கடற்கரையில் செல்வாக்குச் செலுத்திய பட்டங்கட்டிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த பட்டங்கட்டிகள் ஆங்கிலேயர் ஆட்சி வரை கடலோரக் கிராமங்களில் செல்வாக்குச் செலுத்தியவர்கள் இப்போது கூட பட்டங்கட்டி பரம்பரை என்று உழைக்கும் மீனவர்களை விட தங்களை மேன்மையானவர்களாக கட்டிக் கொள்கிறவர்கள் கடலோர கிராமங்களில் உண்டு. கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் கிபி முதலாம் நூற்றாண்டில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக நெல்கிண்டாவில் (கோட்டயத்தில்) விற்பனை செய்யப்பட்டதாக பிளினி குறிப்பிடுகிறார்.உள்நாட்டுத் தேவைக்கான முத்துக்கள் மதுரைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. கொற்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் தரம் பிரிக்கப்பட்டு பல் வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. முத்துக்களை இந்தியப் பெருங்கடலில் இருந்து பிரதானமாக ரோமாபுரிக்கு ஏற்றுமதியானதாக பிளினி கூறுகிறார்.இப்படி வணிகத்திற்காகச் சென்றவர்கள் முத்துக்களைக் கொடுத்து அழகிய யவனப்பெண்களையும், போர் வீரர்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கிவந்ததற்கான குறிப்புகளும் உள்ளன. பாண்டியர்களின் அந்தப்புரங்களில் யவனப்பெண்கள் பாண்டிய மன்னர்களுக்கு மதுபானங்களை பரிமாறியாதான குறிப்புகளும் உள்ளன. இந்த யவனர்கள் கிரேக்கர்கள் எனப்படுகிறார்கள். பாண்டியர்களின் கொற்கை தாமிரபரணி ஆற்றின் வண்டல் மண்ணால் நிலமாக மாறியதால் பின்னர் பழைய காயல் பாண்டியர்களின் புதிய துறைமுகம் ஆனது. கொற்கை வண்டல் படிந்து நிலமான பின்னர் புதிய துறைமுகமாக உருவான பழைய காயல்துறைமுகத்தை தேர்ந்தெடுத்த அராபிய மூர்கள் ஆட்சி செய்தனர். ஏற்கனவே மலபார் கரையில் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்ததோடு காயலையும் கைப்பற்றியதால் கீழைக்கரையோரத்திலும் மேற்குக் கரையோரத்திலும் அராபியர்கள் செல்வாக்குப் பெற்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வலிமையுடன் இருந்த பாண்டியர்கள் இலங்கையை வென்று முத்துக்குளித்தல் உரிமையையும் கைப்பற்றி முழு வலிமை பெற்றனர். பதினான்காம் நூற்றாண்டில் வடக்கிலிருந்து நடந்த முஸ்லீம் படையெடுப்பால் பாண்டியர்களின் செல்வாக்குச் சரிந்தது. இதுவும் பரதவர்கள் மீது மூர்கள் செல்வாக்குச் செலுத்த ஒரு காரணமாக அமைத்தது. போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அராபியர்கள் காயல் துறைமுகத்திற்கு வந்தனர். மலபாரில் தொடங்கி கீழைக்கடல் வரை செல்வாக்குச் செலுத்திய மூர்களை பரவர்கள் எதிர்த்தாக வேண்டிய தேவை எழுந்தது. தாங்கள் முத்தெடுத்து சந்தை மூலம் விற்பனை செய்த காலம் மாறி நேரடியாக உற்பத்தியிலேயே மூர்கள் கைவைத்தமை பரவர்களுக்குள் கடும் கொந்தளிப்பை உருவாக்க ஒரு தாக்குதலுக்கான சூழலை அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த வேளையில் ஒரு பரவனுக்கும் மூருக்கும் வந்த தகராறில் பல நூறு மூர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் படகுகள் சேதப்பட்டுத்தப்பட்டதான தகவல்கள் இயேசுசபை ஆவணங்களில் உள்ளது. தெற்கில் கொடுமைகளைச் சந்தித்து பதட்டமாக வாழும் பரவர்கள் கொச்சியில் இருக்கும் போர்த்துக்கீசியரிடம் உதவி பெற்று மூர்களிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளுமாறு ஜான் டி குரூஸ் என்பவர் பரவர் சாதி தலைவர்களான பட்டங்கட்டிகளுக்கு அறிவுரை வழங்க பட்டங்கட்டிகள் கொச்சிக்குக் சென்று போர்த்துக்கீசியரின் உதவியை நாடிய போது அவர்கள் மதத்தை ஒரு பாதுகாப்பான கருவியாக பயன்படுத்தினார்கள். மதம் மாறும் கோரிக்கையை அவர்கள் வைக்க, பட்டங்கட்டிகளும் வேறு வழியில்லாமல் கிறிஸ்தவத்தை தழுவ சம்மதித்தனர். கொச்சிக்கு உதவி கேட்டு தூது சென்ற பட்டங்கட்டிகளுக்கு கோவாவின் தலைமை குருவாக இருந்த மிக்கேல் வாஸ்சும். கொச்சின் பங்குகுருவாக இருந்த கொன்சால்வஸ் அடிகாளாரும் ஞானஸ்நானம் வழங்கி திருமுழுக்கு அளித்தனர். 1536-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் போர்த்துக்கீசிய தளபதியான பேதுருவாஸ் தலைமையில் பெரும் கப்பற்படை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு வேதாளை என்ற இடத்தில் அராபிய மூர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் போர் நடந்தது. காயல்பட்டினம் மூர் மன்னன் கொல்லப்பட்டு போர்த்துக்கீசியர் காயல்பட்டினத்தை கைப்பற்றியதுடன் கீழைக்கடலோரத்திலும் போர்த்துக்கீசியர் கால் பதித்தனர். காயல்பட்டினத்தில் இருந்து ஆட்சி செய்த 500 ஆண்டுகால மூர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாதிரியார் மைக்கேல் வாஸின் முன்னிலையில் தூத்துக்குடி, பழையகாயல், புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு, திருசெந்தூர், உள்ளிட்ட ஏழு கடற்துறையச் சார்ந்த முப்பதாயிரம் மக்கள் கூட்டமாக ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவினார்கள். கொற்கையிலிருந்து கடல் பின் வாங்கியதால் அது அழிந்து காயல் துறைமுகம் உருவாகிப் புகழ் பெற்றது. பின்னர் காயலும் கடலிலிருந்து தொலைவாகிவிட்டதாக மார்கோபோலோ கூறுகின்றார். அதன் பின் தூத்துக்குடி முத்துக்குளிப்பில் துறைமுகமாக மாறி இன்று வரை பெருநகராக வளர்ந்து கொண்டே வருகிறது. பண்டையத் தமிழர்களின் புதைகுழிகள் தொடர்பாகச் சங்க இலக்கியங்களில் பல்வேறு நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள புதைகுழிகளில் இருப்பது கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர். சங்க இலக்கிய வருணனைகள் என்பவை வெறும் கற்பனையல்ல, உண்மையின் விவரிப்புகளே என்பதை நிரூபிக்க ஆதிச்சநல்லூர், ஆதார நல்லூராய் விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் மார்கோபோலோ, யுவான் சுவாங் போன்றவர்கள் குறிப்பிட்டுள்ள இப்பகுதியிலுள்ள கொற்கை, பழைய காயல் போன்ற பகுதிகளைப் பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மட்டுமல்லாமல் வேறு வகையிலான வரலாற்று ஆய்வுகளும் நடத்தினால் இன்னும் அற்புதமான செய்திகள் கிடைக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். காயல் - கடலில் இருந்து பின்வரும் உப்பு நிறைந்த நீர்ப்பாயும் ஆற்றுப்பகுதி- Backwater. தொகுப்பு - ஜொமெல் பெர்னாண்டோ, பழைய காயல் A History of Tinnevelly By Robert Caldwell, Caldwell R. Bishop Page 36 to 42
  • Show all comments
This article was last modified 11 years ago