ஸ்ரீஅமுதகடேஸ்வரர் திருக்கோவில், குழகர்கோயில், கோடிக்கரை,

India / Tamil Nadu / Vedaranniyam /
 கோவில், சிவன் கோயில், Vinayagar / Pillaiyar temple (en), தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

SCN127 - ஸ்ரீமைத்தடங்கண்ணி எனும் ஸ்ரீஅஞ்சனாக்ஷி சமேத ஸ்ரீகுழகேஸ்வரர் திருக்கோவில், கோடியக்கரை எனும் திருக்கோடி சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 127வது தலம்.TPuT - கோடியக்காடு ஒரு திருப்புகழ் திருத்தலம்.இங்குள்ள ஸ்ரீசுப்ரமணியர் தமது திருக்கரத்தில் அமுத கலசத்துடன் தரிசனம் அளிக்கிறார்.விநாயகரோ ஸ்ரீஅமிர்த விநாயகர்.TrVT - மேலும் விஷேசமான அமுத தீர்த்தம்.இறைவனது திருநாமமோ ஸ்ரீஅமுதகடேசர்.அம்பாள் திருநாமமோ ஸ்ரீஅஞ்சனாட்சி,அவளது பார்வையே அமுதம்,எல்லாமே அமுதம் தான் இங்கு, இதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு? வேறன்ன..கோடியக்கரை வந்து வழிபடுவோர் நோய்கள் நீங்கி, அனைத்து நலன்களும் பெற்று அமுதம் போல் வாழ்வு பெறுவர் என்பதே.NvPT - நவக்ரக பரிகாரத் தலம், கிரகங்கள் எல்லாம் நேர் வரிசையில் நின்று ஸ்ரீகுழகேசர் தாளைப் பணிவதால் இஃது ஒரு கோளிலித் தலம். IKT rAmAyan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், ஸ்ரீராமர், பாலம் கட்ட இடம் தேர்ந்து எடுக்க, இங்கு வந்ததின் அடையாளமாக ஸ்ரீராமர் பாதம் அருகே உள்ளது.பிறகுதான் சேதுக்கரை சென்று பாலம் கட்டினார்.ஸ்ரீசேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த ஸ்ரீசுந்தரர், திருக்கோடிக்குழகர் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் உருகிக் கண்கள் பணிக்க, " தனியே இருந்தாய் பெருமானே.." என்று பதிகம் பாடியுள்ள பதி இது.வனப்பகுதியாதலால் காடுகிழாள் எனும் வனதேவதைக்குத் தனிச் சந்நிதி உள்ளது. தக்ஷிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பானது.கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக ஐதீகம்.குழகர்கோவில் உள்ள இடம் கோடியக்காடு, கடல் உள்ள இடம் கோடியக்கரை.
shaivam.org/siddhanta/sp/spt_p_tirukkodi.htm
temple.dinamalar.com/New.php?id=583
அமைவிடம்: திருக்கோடிக்கரைக்கு வேதாரண்யத்திலிருந்து பேருந்துகள் நிறைய உள்ளன. அகத்தியம்பள்ளிக்கு சில கிமீ தொலைவு.
தல வரலாறு
* திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்றபோது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தலவரலாறு கூறுகிறது.
கல்கியின் பொன்னியின் செல்வன்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
அத்தியாயம் 1 : பூங்குழலி
மற்றொரு பக்கத்தில் குட்டை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் கோபுரம் ஒன்று தலை தூக்கி நின்றது. அதனடியில் கோடிக்கரைக் குழகர், கோயில் கொண்டிருந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸரீ சுந்தர மூர்த்தி நாயனார் இந்தக் கோடிக் கரைக்கு வந்தார். காட்டின் மத்தியில் தன்னந்தனியே கோயில் கொண்டிருந்த குழகரைத் தரிசித்தார்.
"அந்தோ! இறைவா! இப்படி இந்தக் கடற்கரைக் காட்டின் மத்தியில் துணையின்றித் தனியே இருந்தீரே? இருக்க வேறு இடமாயில்லை? பக்தர்கள் கூட்டங் கூட்டமாக உமது புகழைப் பாடிக்கொண்டிருக்கும் ஸ்தலங்கள் எத்தனையோ இருக்க, இந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில் கொண்டிருப்பதேன்? இக்கொடியேனுடைய கண்கள் இந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே!" என்று மனமுருகிப் பாடினார்.
320 கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. 7.32.1

322 மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
பத்தர் பலர்பாட இருந்த பரமா
கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா
எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே. 7.32.3

ஸரீசுந்தரமூர்த்தி நாயனார் வந்து தரிசித்துவிட்டுப் போன இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கோடிக்கரைக் குழகர் அதே நிலையில்தான் இருந்தார்.(ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைக்கும் கோடிக்கரைக் குழகர் அதே தனிமை நிலையில்தான் இருந்து வருகிறார்!) சுற்றிலும் இன்னும் கொஞ்சம் காடுகள் மண்டிப் போயிருந்தன. அக்காடுகளில் மரப் பொந்துகளில் ஆந்தைகளும் கூகைகளும் குழறின.பார்ப்பதற்குப் பயங்கரமான வேடுவர்கள் சிலர்தான் காட்டின் மத்தியில் ஆங்காங்கு குடிசை போட்டுக் கொண்டு வசித்தார்கள்.
ஆம்; ஒரே வித்தியாசம் இருந்தது. ஸரீ சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்திருந்தபோது கலங்கரை விளக்கம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, முதற் பராந்தகரின் காலத்திலேதான் அது கட்டப்பட்டது. கலங்கரை விளக்கத்தில் பணிசெய்வோருக்கென்று சில ஓட்டு வீடுகள் அதைச் சுற்றிச் கட்டப்பட்டன. கோடிக்கரைச் குழகர் கோயிலில் பூஜை செய்யும் பட்டரும் அங்கே வந்து குடியேறினார்.
பூங்குழலி கடற்கரை ஓரத்தில் படகின்மீது சாய்ந்த வண்ணம்.....
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°17'54"N   79°49'44"E
  •  113 கி.மீ
  •  128 கி.மீ
  •  181 கி.மீ
  •  238 கி.மீ
  •  336 கி.மீ
  •  369 கி.மீ
  •  381 கி.மீ
  •  392 கி.மீ
  •  409 கி.மீ
  •  479 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago