ஸ்ரீகற்பக நாதர் திருக்கோவில், கடிக்குளம், கற்பகநாதர்குளம்

India / Tamil Nadu / Thiruthuraipundi / Muthupettai road
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN109 - ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீகற்பகநாதர் திருக்கோவில்,திருக்கடிக்குளம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 109வது தலம்.மக்கள் 'கற்பகநாதர் குளம்' என்று வழங்குகின்றனர். இஃது கடிக்குளம் கோயிலில் உள்ள தீர்த்தத்தின் பெயர்.ஆலயத்தின் வெளியில் நந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.MuVT - மூலவர் விசேஷ தலம்,எட்டுப்பட்டை வடிவில் சிவலிங்கம் காணப்படுகிறது.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,இந்த வடிவமானது அஷ்டலட்சுமியின் அருளை அள்ளித்தரும் மூர்த்தமாம்.தேவர் உலகத்தில் இருக்கும் தேவதருவாகிய கற்பக மரம், இம்மூர்த்தம் போலவே தானும் எட்டுக் கிளைகளைக் கொண்டு கேட்டதைக் கொடுப்பதால், இவருடைய திருநாமம் கொண்டே 'கற்பக விருக்ஷம்' என அழைக்கப்படுகிறது.கேட்டவர்களுக்கு கேட்ட வரம் தரும் மூர்த்தி இவரே.இத்தல ஈசனை, அஷ்டமி திதியிலும், சனிக்கிழமைகளில் வரும் புத ஓரையிலும் வெண்ணெய் சாத்தி வணங்கினால், வேண்டும் வரம் கிடைக்கும்.PT pithru dhOsha nivarthi - பித்ரு தோஷம் நீக்கக்கூடிய தலம்.ஸ்ரீமாங்கனி விநாயகர் சந்நிதி கோவில் அருகே உள்ளது.இவரே இறைவனைப் பூசித்து மாம்பழம் பெற்ற மூர்த்தி ஆவார்.இவரை வணங்க பெற்றோர் மீது பக்தியும், எல்லாம் வெல்லும் ஞானமும் கை கூடும்.கார்த்திகாச்சுனன் என்ற அரக்கன் கற்பக லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.அருகே சிறிய பெருமாள் ஆலயமும் உள்ளது.
shaivam.org/siddhanta/sp/spt_p_kadikkulam.htm
temple.dinamalar.com/New.php?id=297
அமைவிடம்: தமிழ் நாடு திருவாரூர் திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு செல்லும் பஸ்சில் இத்தலத்தை அடையலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் சாலையில் சென்றால் சுமார் 15 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°25'24"N   79°36'46"E
  •  130 கி.மீ
  •  137 கி.மீ
  •  203 கி.மீ
  •  263 கி.மீ
  •  351 கி.மீ
  •  384 கி.மீ
  •  401 கி.மீ
  •  407 கி.மீ
  •  424 கி.மீ
  •  499 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago