ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் ஆலயம்,திருக்கழுக்குன்றம் (Thirukkalukundram)

India / Tamil Nadu / Tirukkalukkundram / Thirukkalukundram
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT28 A - ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் ஆலயம்,திருக்கழுக்குன்றம் 28(A)வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.வண்டு(சங்கு) அல்லது வன விநாயகர் இங்கு ஸ்தல விநாயகர்.KyWT - கலியுகத்திலும் அதிசயமான தலம்,500 அடி உயரமுள்ள இம்மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம் ' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.ஆனால் அக்கருட பக்ஷிகள் தற்போது வருவதில்லை.அது மட்டுமல்ல மார்க்கண்டேர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்ததால்.அது முதற்கொண்டு 'சங்கு தீர்த்தத்தில்' பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் மட்டுமே பிறக்கும் சங்கு, குளத்தில் பிறப்பது அதியற்புதம்.மேலும் இந்திரன் 12 வருடங்களுக்கு ஒருமுறை இறைவரை இடி மூலமாக வணங்கும் தலம் எனினும் மூலவருக்கோ. ஆலயத்திற்கோ எந்த சேதமும் ஏற்படுவதில்லை.PT Paronia - சித்தபிரமை குணமாக வணங்க வேண்டிய ஆலயம்.மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டு இத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடைகிறார்கள்.PT Health - உடல் நோய்களைப் போக்கும் தலம்,அதிகாலையில் சங்கு தீர்த்தக் குளத்தில் மூழ்கி எழுந்து கிரிவலம் வருவோர்க்கு தீராத வியாதிகள் தீருகிறது இது அனுபவபூர்வமான உண்மை.TvsT - திருவாசகத் திருத்தலம்,மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது.பிரகாரத்தில் ஆத்மநாதத் சந்நிதி - பீடம் மட்டுமே உள்ளது; பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது. SCPT - ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஆலயம் அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம்,சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம்!
temple.dinamalar.com/New.php?id=632
shaivam.org/hindu-hub/temples/place/196/thirukazhukundr...
ஆலயச்சிறப்பு:இது அடிவாரத்தில் உள்ள தாழக்கோவில்.மலைமேல் ஒரு கோயில்மலைக்கோயில், தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.இந்திரன் இடியால் வணங்குவதை மறுநாள் கருவறையின் புகைக்கறை மற்றும் மின்சாரத் துண்டிப்பின் மூலமாக அறிவார்கள்.பக்ஷி தீர்த்தமே புராணப் பெயர்.இந்தியாவின் பிறபகுதி இந்துக்கள் இக்கோவிலை பக்ஷி தீர்த்தம் என்றே அறிவர்.
temple.dinamalar.com/New.php?id=632
shaivam.org/hindu-hub/temples/place/196/thirukazhukundr...
Location:செங்கற்பட்டிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன; இங்கிருந்து 14 கி. மீ. தொலைவில் உள்ள இத்தலம். செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லும் பேருந்துகளும் இவ்வழியே செல்கின்றன.தொடர்பு : 044 - 27447139, 09442811149
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°36'24"N   80°3'20"E
  •  70 கி.மீ
  •  422 கி.மீ
  •  537 கி.மீ
  •  613 கி.மீ
  •  666 கி.மீ
  •  667 கி.மீ
  •  695 கி.மீ
  •  970 கி.மீ
  •  971 கி.மீ
  •  1060 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago