மறையூர் சிவன் கோயில்

India / Tamil Nadu / Mayiladuthurai / மயிலாடுதுறை சாலை

மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் தொடர்வண்டி மேம்பாலத்தில் ஏறி இறங்கியவுடன் இடதுபுறம் மறையூர் செல்லும் சாலை உள்ளது, அதில் மூன்று கிமி சென்றால் மறையூர் அடையலாம்.
வேதம் ஓதும் மறையவர்களுக்கு தானம் அளிக்கப்பபட்ட ஊராதலால் மறையூர் என பெயர் பெற்றது.

அந்தணர்கள் இருந்தபோது அவர்களுக்காக கட்டப்பெற்ற கோயில் இதுவாகும். இருபது சென்ட் பரப்பளவில் கிழக்கு நோக்கி கட்டப்பெற்ற கோயில். ராஜகோபுரம், சுதை நுழைவாயில் என எதுவும் இல்லை, மதில் சுவர் சூழ இறைவன் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளது. இதனால் இரு புறத்திலும் மதிலில் வாயில்கள் உள்ளன. இருவரது கருவறையும் வளைகூம்பு மண்டபத்தினால் இணைக்கப்பட்டுள்ளது.

இறைவன்பெயர் அகத்தீஸ்வரர் இறைவியின் பெயர் முக்தாதாடங்கவல்லி

பிரகாரத்தில் விநாயகர், முருகன் இருவரும் தனி சிற்றாலயங்களில் உள்ளனர். மகாலட்சுமி சன்னதி இல்லை. கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரமன் துர்க்கை உள்ளனர்., சண்டேசர் தனி சிற்றாலயத்தில் உள்ளார். வடகிழக்கில் பெரிய வில்வமரம் பழங்களுடன் வரவேற்கிறது.
அதிக மக்கள் வரத்து இல்லாத இது போன்ற கோயிலை காணும்போதெல்லாம் கையில் வெண்ணையை வைத்துகொண்டு நெய்க்கு அலைதாழ் போல், கட்டண கோயில்களில் காசு கொடுத்து வரிசையிலும், கூண்டுகளிலும் அடைபட்டு நிற்க்கும் மனிதர்களின் அவலத்தினை நினைத்து வருத்தப்படத்தான் என்னால் முடிகிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°4'12"N   79°37'26"E
  •  199 கி.மீ
  •  200 கி.மீ
  •  269 கி.மீ
  •  321 கி.மீ
  •  423 கி.மீ
  •  456 கி.மீ
  •  470 கி.மீ
  •  479 கி.மீ
  •  495 கி.மீ
  •  568 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago