ஸ்ரீஸ்வர்ணகடேஸ்வரர் ஆலயம், திருநெல்வெண்ணெய், திருநெய்வணை (Thirunelvennai திருநெல்வெண்ணெய்)

India / Tamil Nadu / Ulundurpettai / Thirunelvennai திருநெல்வெண்ணெய்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

NNT10 - ஸ்ரீபிரஹந்நாயகி சமேத ஸ்ரீசொர்ணகடேசர் ஆலயம், நெய்வணை 10வது நடுநாட்டுத் தேவரத்தலம்.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், இறைவன் ஏழைக்கு இறங்கி பொற்குடம் கொடுத்ததால் பொற்குடம் வழங்கிய நாதர் என்று பெயர்.நீலமலர்க்கண்ணி,சொர்ணகடேஸ்வரரிடம் வேண்டிக் கொண்டால் செய்த பாவங்கள் நீங்கி ஞானம் கிடைக்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.SrPT - சூர்யபூஜை நடக்கும் தலம், மாசி மதம் சிவராத்திரியின் போது சூர்யபூஜை நடக்கும் திருத்தலம்.அந்நேரத்தில் மட்டும் சிவ பெருமான் நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை என நிறங்கள் தோயத் தரிசனம் நல்குவது காண வேண்டியது!
இங்குள்ள தல விநாயகர் வரசித்தி விநாயகர்!சிவ பெருமானே வநது நெல்லை அணையாக கட்டிய தலம் என்பதால் 'நெல் அணை' காலப்போக்கில் "நெய்வணை' என்று மருவியுள்ளது.தங்கக் குடம் வழங்கிய வள்ளலின் ஆலயம் தகரக் குடத்திற்குக் கூட வழியின்றி இருப்பது மதசார்பற்ற அரசியல் அவலம்! நர்த்தன சுந்தரரும், தாளமிடும் சம்பந்தர் திருமேனியும் கண்டு மகிழத் தக்கது! இருட்டில் தடுமாறிய சம்பந்தப் பெருமானுக்கு அம்பாள் எதிர் சென்று அழைத்து ( அந்த இடம் தற்போது 'எதலவாடி' ) வந்ததால், மகிழ்ந்து ஆடிக் கொண்டே பதிகம் பாடினர் என்பது வரலாறு!
temple.dinamalar.com/en/new_en.php?id=157
shaivam.org/hindu-hub/temples/place/130/thirunelvennnai...
அமைவிடம்:உளுந்தூர்பேட்டை - திருக்கோயிலூர் (வழி) எலவானாசூர்கோட்டை நெடுஞ்சாலையில் வந்து "எறையூர்" அடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வந்து (வடகுரும்பூர் வழியாக) 4-கி. மீ. தொலைவில் உள்ள நெய்வணையை அடையலாம். எறையூர் - நெய்வெணை நகரப் பேருந்து செல்கிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°46'16"N   79°14'25"E
  •  185 கி.மீ
  •  527 கி.மீ
  •  656 கி.மீ
  •  703 கி.மீ
  •  751 கி.மீ
  •  784 கி.மீ
  •  791 கி.மீ
  •  1057 கி.மீ
  •  1078 கி.மீ
  •  1187 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago