ஸ்ரீகோணேஸ்வரர் திருக்கோயில்,குடவாசல், திருக்குடவாசல்

India / Tamil Nadu / Kodavasal / kumbakonam- thiruvarur road
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN094 - ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகோணேஸ்வரர் ஆலயம், திருக்குடவாயில் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 94வது தலம்.MdKT - கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று. PT Leprosy - குஷ்ட நோய் தீர்க்கும் திருத்தலம்,திருணபிந்து முனிவருக்கு இறைவன் குடத்தின் வாயில் வெளிப்பட்டு, குஷ்ட நோயைத் தீர்த்தருளிய தலம்.TPuT - அருணகிரியாரும் இத்தலத்துச் சிறப்புகளைத் தம் திருப்புகழ் பாடல்களில் ஏத்தியுள்ளார்.TrVT - இக்கோவிலின் 'அமிர்த தீர்த்தம்' மகாமக புராணத்துடன் தொடர்புடையது. பிரளய காலத்தில் நீரில் மிதந்து வந்த அமிர்த கலசம் சிவனருளால் மூன்று பகுதிகளாக பிரிந்து கும்பத்தின் மத்திய பாகம் குடந்தையிலும், அடிப்பாகம் கலய நல்லூரிலும், வாய்ப்பாகம் வன்னிதேசமான குடவாயிலிலும் விழுந்து லிங்கமாயின என்று அம்மாகாத்மியம் விவரிக்கின்றது. SrPT - தை மாதம் 3 நாட்கள் இறைவருக்கு சூர்யபூஜை நடக்கிறது.CRfsT - சாதி அரசியலைக் கேள்வி கேட்கும் திருத்தலம், ஸ்ரீவியாசரின் சீடரான,புராணங்களைத் தொகுத்த, ஸ்ரீசூத பௌராணிகர் இங்கு வழிபாடு செய்துள்ளமையின் அவரது திருமேனியுருவம் இக்கோவிலில் உள்ளது. திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் குறிப்பிடும் ‘‘பெருங்கோயில்’’ என்ற இவ்வாலய அமைப்பு பற்றிய குறிப்பினை சோழனின் இச்சாசனம் ‘பெருந் திருக்கோயில்’ என்றே குறிப்பது நோக்குதற்குரியதாகும்.PT nAga dhosham - ஜாதகத்தில் நாகதோஷம் நீக்கக் கூடிய சக்தி வாய்ந்த தலங்களுள் ஒன்று. அமிர்தம் கொணர்ந்த ஸ்ரீகருடன்பகவான் பூசித்துத் தானும்,தன் தாயும் சாபம் நீங்க அருள் பெற்ற தலம்,எனவே இங்கு வணங்குவோர் நாகதோஷங்கள் நீங்குகின்றன.மேலும் சைவத்திருத்தலமான இக்கோவிலின் திருமதிலின் மேல் கருடன் உருவங்கள் உள்ளன. இப்பூவுலகில் ‘‘கோணேசம்’’ என்ற பெயரில் விளங்கும் இரண்டு சிவாலயங்களுள் ஒன்று திருகுடவாசல் மற்றொன்று ஈழநாட்டு (இலங்கை) கோணேசம் ஆகும்.
shaivam.org/siddhanta/sp/spt_p_kudavayil.htm
temple.dinamalar.com/New.php?id=312
Location:கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் 15கீ.மீ. தூரத்தில் குடவாயில் இருக்கிறது. திருவாரூர், கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°51'29"N   79°28'54"E
  •  173 கி.மீ
  •  185 கி.மீ
  •  253 கி.மீ
  •  310 கி.மீ
  •  400 கி.மீ
  •  433 கி.மீ
  •  452 கி.மீ
  •  457 கி.மீ
  •  473 கி.மீ
  •  550 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago