ஸ்ரீகரபுரீஸ்வரர் ஆலயம்,திருப்பாற்கடல் (Thirupparkadal Village)

India / Tamil Nadu / Walajapet / Thirupparkadal Village
 கோவில், சிவன் கோயில்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

TVT071 karapuram01 - ஸ்ரீபாலகுஜாம்பாள் சமேத ஸ்ரீகரபுரீஸ்வரர் ஆலயம், கரபுரம், திருக்கரபுரம் எனும் திருப்பாற்கடல் 71வது தேவாரவைப்புத்தலம்.அருகே உள்ள விரிஞ்சிபுரமும் கரபுரம் எனும் வைப்புத் தலமே.தமக்கெனத் தனிப் பாடல்கள் பெறாது, பிற தலங்களுக்கு உரிய தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோவில்கள் அனைத்தும் " TVT- தேவார வைப்புத் தலங்கள்" என அழைக்கப்படுகின்றன. shaivam.org யில் சுமார் 301 வைப்புத்தலங்கள் தமிழ் அகரவரிசைப்படி சுட்டப்பட்டு உள்ளன. அதே வரிசையில் இங்கும் தேவார வைப்புத் தலங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.TPuT - திருப்புகழ் திருத்தலம்.SHRT - ஹிந்து மதத்தில் ஒற்றுமை ஓங்க வணங்க வேண்டிய தலம்,புண்டரீக முனிவருக்கு சைவ-வைணவ பேதமின்மையை ஸ்ரீவிஷ்ணு உணர்த்திய தலம்.ஸ்ரீகரபுரீஸ்வரர் சிவன் கோவில், திருக்கரபுரம் ,திருப்பாற்கடல்.(திருக்)கரபுரம் என்பது தேவாரப் பெயர்.இறைவன் கரபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தி. அவர் சிறியவர் மற்றும் நேர்த்தியானவர். தேவி அபிதகுஜாம்பாள் அழகாகவும் தனித்தனியாகவும் வீற்றிருக்கிறாள். லிங்கத்தில் இருந்து ஈசரின் கரம் தேவியின் கரம் பிடடித்ததாக தலவரலாறு. இது வைப்புத்தலம் என்பதோ வரலாறோ ஊர்காரர்களுக்கும் தெரியவில்லை. திருப்பாற்கடல் இரட்டை வைணவ கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கும் தெரியவில்லை. இக்கோயில் அப்பர் (6-7-7) பாடிய தேவாரப் பாடல் வைப்புத் தலம்.
shaivam.org/hindu-hub/temples/place/320/karapuram-karap...
அமைவிடம்:இந்த கோவில் விஷ்ணுவின் (பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் ரங்கநாத பெருமாள்) இரட்டை கோவில்களுக்கு கிழக்கே ஒரு கிமீ தொலைவில் அமைந்து உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°53'3"N   79°27'3"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11மாதங்களுக்கு முன்