ஸ்ரீவில்வநாதீஸ்வரர் ஆலயம்,திருவலம் (திருவல்லம்) (Tiruvalam Village)

India / Tamil Nadu / Melvisharam / Tiruvalam Village
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT10 - ஸ்ரீதனுமத்யாம்பாள் எனும் ஸ்ரீவல்லாம்பிகை சமேத ஸ்ரீவல்லநாதர் எனும் வில்வநாதேசர் ஆலயம், திருவலம்(திருவல்லம்) 10வது தொண்டைநாட்டுத் தேவாரத் தலம்.வில்வக்காடாக இப்பகுதி இருந்தமையால் இத்தலம் 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' எனப்படுகிறது.'கனி வாங்கிய பிள்ளையார்' வலம்வந்து கனி வாங்கியதால் திருவலம் ஆனது. இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் 'தீக்காலி அம்பாள்' (ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும்; உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை, ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார்.இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது.TPuT - திருப்புகழ் திருத்தலம்,அருணகிரிநாதரின் திருப்புகழில் 'திருவலம்' என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.JST - ஜீவசமாதி ஆலயம்,சங்கமுனியின் (சனகமுனி) ஜீவசமாதியும் அவரது திருவோடும் இத்தலத்தில் உள்ளன.VrnJT - வருணஜெபம் செய்ய சிறந்த தலம்,பஞ்சம் நேரில் 'பாதாளேஸ்வரர்', இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும்.MukT - முக்தி தரும் ஸ்தலம்,கஞ்சனுக்கு இறைவன் முத்தி தந்த ஐதீகம், திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது; இதற்காக தை மாதம் பொங்கல் கழித்து 10-ம் நாள் சுவாமி இங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார். இம்மலையில் (காஞ்சனகிரியில்) சித்ரா பௌர்ணமியில் குளக்கரையிலிருந்து பார்த்தால் ஜோதியொன்று தோன்றிப் பின் மறைகின்றதாம்.எங்கும் பார்த்திராத அளவில் இத்தலத்தில் நடராஜ சபை நட்சத்திர மண்டபமாக அமைந்துள்ளது. அதிசயமான முறையில் நட்சத்திர தேவதைகளின் உருவநிலையை மண்டப விமானத்தில் பார்க்க முடிகிறது.
கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது. இதன் வரலாறு - இத்தலத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் கஞ்சன்கிரி என்றொரு மலையுள்ளது. (அது தற்போது 'காஞ்சனகிரி' என்று வழங்குகின்றது.) இம்மலையில் கஞ்சன் என்னும் அசுரன் மிகப்பழங்காலத்தில் சுவாமிக்கு தீர்த்தம் கொண்டுவருவதை தடுத்தான். செய்வதறியாது உரியோர் இறைவனிடம் முறையிட, நந்தியம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின்; லலாடம் வீழ்ந்த இடம் தற்போது "லாலாபேட்டை" என்றும், சிரசு வீழ்ந்த இடம் "சீகராஜபுரம்" என்றும், வலக்கால் அறுபட்டு வீழ்ந்த இடம் "வடகால்" என்றும், தென்கால் (இடது கால்; - தென்கால் என்பது அவ்வசுரன் நின்று போரிட்ட திக்கிலிருந்து கையாளப்பட்ட வார்த்தையாக தெரிகிறது) வீழ்ந்த இடம் "தென்கால்" என்றும், மணிக்கட்டு வீழ்ந்த இடம் "மணியம்பட்டு" என்றும், மார்பு வீழ்ந்த இடம் "குகையநல்லூர் " என்றும் வழங்கப்படுகிறது. (இவ்வூர்கள் எல்லாம் திருவலத்திற்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளன.) இந்நிகழ்ச்சியை யொட்டியே நந்தி, காவலுக்காக கிழக்கு நோக்கியுள்ளார்.
temple.dinamalar.com/New.php?id=119
shaivam.org/hindu-hub/temples/place/171/thiruvallam-vil...
அமைவிடம்:ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன. தொடர்பு : 0416 - 2236088
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°59'4"N   79°15'59"E

கருத்துரைகள்

  • காட்பாடிக்கு அண்மையிலுள்ள இருப்புப்பாதை நிலையம். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன. http://www.kamakoti.org/tamil/tirumurai13.htm http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_vallam.htm
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5மாதங்களுக்கு முன்