KAIKONDA AYYANAR KOVIL[கைகொண்ட அய்யனார் கோவில்-]

India / Tamil Nadu / Surandai /

BY......
வெங்கடேஸ்வரபுரம்
Nearby cities:
Coordinates:   8°53'3"N   77°22'20"E

Comments

  • kaikondar iyaney thunai
  • ஓம் ஸ்ரீகைக்கொண்டார் ஐயனேதுணை
  • திப்பணம்பட்டியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளதுதான் ஸ்ரீதர்ம சாஸ்தா கைக்கொண்ட அய்யனாரின் திருக்கோவில். கோவிலின் மூன்று புறமும் கைக்கொண்டான் குளமும், ஒரு புறம் வயல்வெளிகளாலும் சூழப்பட்டு அழகிய சோலைபோல் காட்சியளிக்கிறது ஐயனின் திருக்கோவில். கோவிலின் தென்மேற்குப்பகுதியை நோக்கினால் யானையின் முதுகுபோல் வளைந்து தோற்றமளிக்கும் தோரணமலை, இயற்கை நறுமணங்களை அள்ளிவரும் தென்பொதிகை காற்று, குற்றாலச்சாரலின் குழுமை என இயற்கைத் தாயோடு கைகோர்த்து பூரணகலா அம்பிகை, புஸ்பகலா அம்பிகையோடு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் நம் கைக்கொண்ட ஐயனார். கைக்கொண்டார் ஐயன் மட்டுமின்றி மாடசாமி, கருப்பசாமி, பேச்சியம்மன், பாதாளபைரவி, சுடலைமாடன், பொம்மக்காள், திம்மக்காள், கன்னியம்மாள், பலவேசபட்டவராயன், சங்கிலிபூதத்தார் என பல்வேறு தெய்வங்கள் சன்னதியின் நாற்புறமும் வீற்றிருக்க பூலோக சொர்க்கமாய் காட்சியளிக்கிறது கைக்கொண்டார் ஐயனின் திருக்கோவில். திப்பணம்பட்டியை சுற்றியுள்ள ஐம்பத்தாறு சிற்றூர்களையும் ஆட்சி செய்யும் நம்ஐயன் தன்னிடம் கையேந்தி வரும் பக்தர்களை கலங்காமல் வாழவைப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களின் நம்பிக்கைக்கேற்ப ஐயன்செய்யும் லீலைகளோ ஆயிரமாயிரம், கண்ணீரோடு வரும் பக்தர்களை தன் கரம்கொண்டு காப்பாற்றும் நம் கைக்கொண்டான் ஐயனின் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையோ ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே வருகிறது. மாதந்தோறும் கடைசி வெள்ளிகிழமை அன்று கைக்கொண்டார் ஐயனுக்கு சிறப்புபூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று பக்தர்கள் பொங்கலிட்டு தங்கள் முடியினை காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐயனின் பிறந்தநாளாம் பங்குனிஉத்திரம் அன்று மிகவும் சிறப்பாக திருவிழா நடைபெறுகிறது. சுற்றியுள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் வரும் பக்தர்களின் கூட்டமோ கணக்கில் அடங்காது. அலைகடல் என மக்கள் கூட்டம், வானவேடிக்கை, வருவோர்க்கெல்லாம் எந்நேரமும் அன்னதானம், ஐயனின் தரிசனத்திற்காக நீண்டு கொண்டேசெல்லும் அர்ச்சனையின் வரிசை, அடுத்தடுத்து வரிசையாக பொங்கும் பொங்கல் வேண்டுதல், மாவிளக்கு ஏற்றும் வேண்டுதல், மலைபோல் குவிந்திருக்கும் மலர்மாலை என அனைத்தும் பார்ப்போரின் உள்ளத்தில் பரவசத்தையும் அளவில்லா ஆனந்தத்தையும் உருவாக்கும். இக்கோவிலின் சிறப்பு மிக்க காவல் தெய்வம்தான் சங்கிலிபூதத்தார். கம்பீரமாய் சிங்கம்போல் கிழக்குநோக்கி காட்சிதருகிறார் சங்கிலிபூதத்தார். கோவிலின் எப்பகுதியில் இருந்து பார்த்தாலும் சங்கிலிபூதத்தாரை நாம் காணாலாம். பூதத்தாரை வணங்குவதால் மனவேதனைகளை இழந்து நம்பிக்கையும் தைரியமும் நாம் பெறலாம். “கைகொடுத்து காப்பாற்றுவார் நம் கைக்கொண்டார் எனும் நம்பிக்கையோடு கையேந்தி வரும் தன் குழந்தைகளை கரம்பிடித்து காப்பாற்றுவதில் நம் கைகொண்டார் ஐயனுக்கு நிகர் வேறு தெய்வமில்லை” என நெஞ்சாரக் கூறலாம். “ஸ்ரீகைக்கொண்டார் ஐயன் அடி தொழுவோம்; ஆனந்தமயமாக வாழ்வோம்” ஓம் ஸ்ரீகைக்கொண்டார் ஐயனேதுணை தலவரலாறு: சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் கிராமப்புறங்களில் தொடர்வண்டி போக்குவரத்தினை அறிமுகப்படுத்தினர். அப்போது தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்வதற்கான பாதையை தேர்வுசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்பாதை பாவூர்சத்திரம், திப்பணம்பட்டி, மேட்டுர், கடையம்,அம்பை வழியாக சென்று திருநெல்வேலியை அடையுமாறு தேர்வு செய்யப்பட்டது. திப்பணம்பட்டி குளத்தின் இருபுறமும் கரைகள் உண்டு. ஒருகரையோ ஊரினை ஒட்டி அரியப்புரத்தை நோக்கி அமைந்துள்ளது(இந்தக் கரையின் மீதுதான் கைக்கொண்ட ஐயனார் எழுந்தருளியுள்ளார்).மற்றொன்று திப்பணம்பட்டி குளத்திற்கும் நாட்டார்பட்டிக்கும் இடையே அமைந்துள்ளது. இதில் ஆங்கிலேயர்கள் தங்கள் தொடர்வண்டி பாதைக்கு தேர்வு செய்ததோ ஊரினை ஒட்டி அரியப்புரத்தை நோக்கி அமைந்துள்ள கரைதான்.இந்தக் கரையின் மீது தங்களின் குலதெய்வம் இருப்பதாகவும், எக்காரணம்கொண்டும் கோவிலை அகற்ற முடியாது எனவும் திப்பணம்பட்டி, அரியப்புரத்தில் வாழ்ந்த முன்னோர்கள் போரிட்டனர். ஆயினும் கோவிலினை அகற்றி தங்களுக்கு தேவையான பாதையை ஏற்படுத்திக் கொள்ள அன்றைய அரசாங்கமும் ஆங்கிலேயர்களும் முயன்றர். இறுதியில் இருகுழுக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பெற்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதாவது குளத்தின் மறுகரைபகுதியில் இருந்து “சின்னகைக்கொண்டாரே” என நாங்கள்(ஆங்கிலேயர்கள்) அழைத்ததும் உங்களின் குலதெய்வம் கோவிலில் இருந்து பதில்குரல் தரவேண்டும். அப்படி இல்லையேல் கோவிலை அகற்றுவது உறுதி என கூறியது பிரிட்டிஷ் அரசாங்கம். ஊர் மக்களும் இந்த முடிவினை ஏற்றனர். முடிவின்படி ஆங்கிலேயர் ஒருவர் தற்போது தொடர்வண்டிபாதை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து (கோவிலில் இருந்து சுமார் 1/2கிலோ மீட்டர் தூரம்) “சின்னகைக்கொண்டாரே” என அழைக்க, கோவில் இருக்கும் திசையில் இருந்து “என்ன” எனப் பதில் குரல் கேட்டதாம்.இதனை ஏற்காத அவர்கள் திரும்பவும் “சின்னகைக்கொண்டாரே” என அழைக்க, “இதோ வருகிறேன்“ என இறைவன் பதிலளித்தாராம். கைக்கொண்டார் ஐயனே நேரில் வந்துகுரல் கொடுத்ததால், தொடர்வண்டிப்பாதையின் தடம் மாற்றப்பட்டது. தற்போது தொடர்வண்டிப்பாதை குளத்தின் மேற்குப்பகுதி கரையின் மீதும், கைக்கொண்ட ஐயனாரின் சன்னதி குளத்தின் கிழக்குப்பகுதி கரையின் மீதும் அமைந்துள்ளது.
  • கைக்கொண்டார் ஐயா, உன் அருளால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னை கலங்காமல் வாழவைக்கும் என்கைக்கொண்டார் சாமி நீயிருக்க குறைகள் என்றும் எனக்கு இல்லையே
  • கைக்கொண்டார் சாமி என்னைகாத்திட வருவாய் தினமும் உன் திருநாமம் மட்டுமே எனக்குத் துணை. ஆறுதல் தருவாய் என் ஐயனே!
  • கைக்கொண்டார் அப்பா என்னுடன் நித்தம் துணை வருவாய்!
  • அபி அற்புதமா எழுதியிருக்க, எனக்கு பிடிச்சிருக்கு எப்படி இப்படியெல்லாம்......... very nice job ……… நீ எழுதியிருப்பது எல்லாமே உண்மை. இதைப் படிக்கும் போது மெய் சிலிர்க்குது. எனக்கு கோவிலுக்கு வரணும் போல இருக்கு.
  • எங்கெங்கும் சந்தன வாசம் உந்தன் சன்னதியில் ஜில் என்ற தென்றலும் வீசும் உன்திரு ஆலயத்தில் எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயனே! எந்நாளும் என்னை வந்து அனைப்பது உந்தன் கைதானே! இனி பிறந்தாலும் உன்கோவில் மணியாய் நான் பிறப்பேன்........... ஏழேழு ஜென்மம் எடுப்பினும் உன்னைக் கை தொழுவேன்............
  • ஒம் ஸ்ரீ கைக்கொண்ட ஐயனார் துணை
  • vaazhga valarga ..Iam following the Lord to worship on every year on Uttiram festival ..grt experience
  • Thankyou for this Information Friend...
  • Show all comments
This article was last modified 13 years ago