sree pArijAthavanEswarar temple, thirukaLar

India / Tamil Nadu / Thiruthuraipundi / thiruthuraipoondi-mannarkudi road
 temple, Shiva temple, thevara paadal petra sthalam

SCN105 - sree kalarmuaLai nAthar along with sree ilang kombanaiyAL temple, thirukkaLar is 105th thEvAra temple of chOzha dhEsh(nAdu) located in south shore of the river cauvEri.
PT JeevasamAthi - jeeva samAthi of sree veerasEkara gnAnadhEsiga swAmy is near to this temple, he is named as thirukaLar Andavar by the people.
temple.dinamalar.com/en/new_en.php?id=341
Location: 10kms in thiruthuraipoondi - mannArkudi! frm thiruthuraipoondi to mannArkudi take left diversion thiru vEdhapuram road and again left turn to muthupEttai road!

திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். மன்னார்குடியிலிருந்து 21kimi தொலைவில் உள்ளது.

பராசரமுனிவர், காலபைரவர், துர்வாசர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இத்தலத்திற்குப் பாரிஜாதவம் தருவனம், கற்பகவனம், என்னும் பெயர்களுண்டு.

இறைவன் - பாரிஜாதவனேஸ்வரர், களர்முளைநாதர்.

இறைவி - அமுதவல்லி, இளங்கொம்பன்னாள், அழகேஸ்வரி.

தலமரம் - பாரிஜாத தீர்த்தம்.

தீர்த்தம் - துர்வாச தீர்த்தம் முதலியன.

சம்பந்தர் பாடல் பெற்றது.

திருக்களர் கோயில் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரத்துடன் ஐந்து தளங்கள் கொண்டு மூன்று பிரகாரங்களுடன், நகருக்கு நடுவில் கிழக்கு நோக்கிய வாயிலுடன் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரே நான்கு புறமும் படித்துறைகள் கொண்ட அழகிய பெரிய திருக்குளம் இவ்வூருக்கு அணிகலனாக விளங்குவதைக் காணலாம்.

திருக்களர் பெருமானுக்கு ஸ்ரீபாரிஜாதவனேசுவரர் என்றும், அம்மனுக்கு அமுதாம்பிகை, அமுதவல்லி என்றும் பெயர்கள் வழங்குகின்றன. ‘களரிமுளை ஈசர்’, ‘களர்முறை நாதர்’ என்ற பெயர்களாலும் இவ்வீசன் அழைக்கப்படுகிறார்.

கல்வெட்டுக்களில் ‘திருக்களர் முளைத்த நாயனார்’, அடைந்தார்க்கருள் செய்த நாயனார் என்றும் காணப்படுகின்றன.

சுவாமி, அம்மன் கோயில்களுக்கு நடுவில் பாரிஜாத மரம் (பவளமல்லிகை மரம்) ஸ்தல விருட்சமாக விளங்கி வருகிறது. துர்வாச முனிவரே இந்த ஸ்தலத்தை உருவாக்கி பாரிஜாத வனம் மத்தியில், ஒரு பாரிஜாத விருட்சத்தின் அடியில் லிங்கமூர்த்தம் ஒன்றை அவ்வனமண்ணாலேயே செய்து அதை அங்கு பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கு பஞ்சாட்சர உபதேசம் இந்த ஸ்தலத்தில் செய்தருளியதால் இக்கோயிலில் காணப்படும் முருகப்பிரானின் திரு உருவம் மிக வசீகரமாக அமைந்துள்ளது.

துர்வாச முனிவர் பூஜித்து வந்த இத்தலத்தை அடைந்து, இங்கு சிலகாலம் தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால், நம்மிடம் உள்ள முன்கோபம், குரோதம் முதலியன நீங்கும் என பக்தர்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.

களரி என்பதற்குக் கூட்டம், சபை, அரங்கம் எனப் பல பொருள்கள். துர்வாசருக்குச் சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனம் தந்தருளியமையால் 'களரி' என்னும் இத்தலப்பெயர் பின்பு 'களர்' என்றாயிற்று. துர்வாசருக்கு நடராஜர் நடனக் காட்சிதந்தவடிவமும் அதன் எதிரில் துர்வாசரின் வடிவமும் (கைகூப்பிய நிலையில்)

வலம்புரி விநாயகர் சந்நிதியும் காணச்சிறப்பானது.

கோவிலூர் மடாலயத்தில் அதிபராக இருந்த வீரசேகர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அவருக்குத் திருக்களர் ஆண்டவர் என்று பெயர்.

நன்கு பராமரிக்கப்படும் இக்கோயிலில் - மடாலயத்தில் சாதுக்கள் இருந்து வருகின்றனர். கோவிலின் பக்கத்தில் வேதபாடசாலையும், பசுமடமும், வேதாந்த மடமும், அறுபத்துமூவர் குருபூஜை மடமும் உள்ளன. இத்தலத்தில் பிடாரி கோயிலும், . கோயிலுக்குள் மூன்று பிராகாரங்கள் உள்ளன.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உள்நுழைந்தால் நந்தியும் கொடிமரமும் உள்ளன. ஆலயத்தின் வடக்கில் வசந்த மண்டபமும் யாகசாலையும் உள்ளன. முகப்பு மண்டபத்துடன் இறைவனுக்கு இரண்டாம் கோபுரத்துடன் பிரகாரமும் இறைவனுக்கு இடப்பாகம் அம்பிகையும் கிழக்கு நோக்கி தனி கோயிலில் உள்ளார், இவருக்கும் தனி முகப்பு கோபுரம் உளது

உள்ளே கருவறை மண்டப வாயிலில் கோயிலூர் ஆதீன ஆண்டவர் உருவமும் நவக்கிரகங்களும் உள. இரு புறமும் அழகிய பெரிய துவாரபாலகர்கள் உள்ளனர்.உள்வாயிலைக் கடந்து சென்றால் சந்திரன், பிரம்மா, விஸ்வகர்மா, வழிபட்ட சந்நிதிகளும் உள்ளன. நால்வர் சந்நிதி உளது. மோக்ஷத்துவாரேஸ்வரர், சோமாஸ்கந்தர் தல (வலம்புரி) விநாயகர், வள்ளி தெய்வயான சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் தரிசிக்கத்தக்கன. நடராஜர் சந்நிதி (பிரம தாண்டவமூர்த்தி) இத்தலத்தில் விசேஷமானது.

. மூலவர் - பாரிஜாதவனேஸ்வரர். அழகிய சிவலிங்கத் திருமேனி. அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார் - என்று குறிக்கப்படுகின்றது. ஞான சம்பந்தர் தம் பதிகத்தில் 'அடைந்தார்க்கு அருளாயே' என்று பாடுவது இங்கு நினைக்கத்தக்கது.

வலம்புரி விநாயகர் சந்நிதியில் - கோபுரத்திற்கு உள்புறத்தில் அகோரவீரபத்ரர் மேற்கு நோக்கி வீரமுடன் காட்சி தருகின்றார்.

'விடங்கர் லிங்கம்' நடராஜருக்குப் பக்கத்தில் பேழையில் உள்ளது. நடராஜர் (பிரபையுடன்) அழகாகத் தரிசனம் தருகின்றார் - அற்புதத் தரிசனம். ஆண்டுக்கொருமுறை ஆதிரையில் மட்டும் புறப்பாடு. இங்குள்ள தீர்த்தங்களுள் துர்வாச தீர்த்தமே சிறப்புடையத. மற்றையவை - பிரமதீர்த்தம் சிந்தாமணிதீர்த்தம் (தெற்கு வீதியில் உள்ளது)

2) ருத்ரதீர்த்தம் (மேல வீதியில் உள்ளது)

3) ஞானதீர்த்தம் (வடக்கு வீதியில் உள்ளது)

சுவாமிக்குச் செய்துள்ள திருப்பணிகளுள், திருக்களர் ஆண்டவர் செய்துள்ள திருப்பணிகளே சிறப்பானவை. பூஜைகள் செம்மையாக முறையாக நடைபெறுகின்றன. சிறப்பான உற்சவங்களும் அவ்வப்போது உரிய காலங்களில் நடத்தப்பெறுகின்றன. மாசி மகத்தில் சிந்தாமணி தீர்த்தத்திலும் பங்குனி உத்திரத்தில் ருத்ர தீர்த்தத்திலும் நடைபெறும் தீர்த்தவாரி சிறப்பு.

முதலாம் ராஜேந்திரன்-திருக்களர் செப்பேடு-கி.பி.1030.ஒரு இதழ் கொண்டது.

முதலாம் ராஜாதிராஜன்- திருக்களர் செப்பேடு-கி.பி 1049.ஒரு இதழ் கொண்டது.

முதலாம் குலோத்துங்கன்- திருக்களர் செப்பேடு-கி.பி.1098. ஒரு இதழ் கொண்டது.
இரண்டாம் ராஜராஜன்- திருக்களர் செப்பேடு-கி.பி.1163. ஒரு இதழ் கொண்டது.
மூன்றாம் குலோத்துங்கன்- திருக்களர் செப்பேடு-கி.பி.1188.

இவ்வூர்க் கல்வெட்டில், ``நம் தேவாரத்துக்குத் திருப்பதியம் பாடும் பெரியான்`` எனவந்துள்ள தொடரில், தேவாரத்துக்கு என்ற பொருளை நுணுகி ஆய்ந்தால் இறைவன் திருமுன் என கொள்ளலாம்

இக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஐந்து செப்பேடுகள் கிடைத்திருக்கின்றன.

அவைகளுள் சோழர்களது எட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜயநகரத்தாரது மூன்றுமாக உள்ளன.

விளக்கு எரிப்பதற்கு பொன் தானம், வரிதானம், நிலதானம் ஆகியவைபற்றி அக்கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. செப்பேடுகள் சென்னைக்கண்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் முளைத்த நாயனார், திருக்களர் உடையார், அடைந்தார்க்கு அருள்செய்த நாயனார் என்னும் திருப்பெயர்களால் கல்வெட்டுக்களில் கூறப்படுகின்றனர்.

இத்திருக்கோயில் திருமடைவிளாகத்துத் தெற்குத் திருவீதியில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார் இடங்கைவிநாயகர் என்னும் பெயர் பெற்றிருந்தார் என அறியலாம்..

இக்கோயில் முன்புறத்துள்ள மண்டபத்தைச் செய்வித்தவர் சீறூருடையான் மறைதேடும் பொருள் பெரிய அம்பலக்கூத்தர். இச்செய்தி மாறவர்மன் குலசேகரதேவன் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது.

இக்கோயிலில் திருவாலவாயுடையாரை எழுந்தருளுவித்துப் பூசைக்கும் திருவமுது படிக்கும் உடலாகத் திருபுவனச் சக்கரவர்த்தியின் ஏழாம் ஆண்டில் நிவந்தம் அளித்தவர் நாகங்குடையார் மண்டை ஆழ்வார் ஆவர். இக்கோயிலில் கருணாகரன் திருமண்டபம் என்னும் பெயருடைய ஒரு மண்டபம் கூறப்பெற்றுள்ளது.

ஊர்ச்சபையார் அதில் கூட்டம் கூடும் வழக்கம் குறிக்கப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் கீழைத்திருவாசல் தென்பக்கம் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மூவாயிர விநாயகப் பிள்ளையார் என்னும் பெயரால் அழைக்கப்பெற்றுள்ளனர்.

சுந்தரத்தோளுடையான் திருமண்டபம் என்னும் ஒரு மண்டபம் இருந்தது. அதிலும் ஊர்ச்சபையார் கூட்டம் கூடி நிர்வாகத்தை நடத்தியதாக ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது. வீரபூபதி உடையார் கல்வெட்டில் வைகாசித் திருவிழாவைப் பற்றிக் கூறப் பெற்றுள்ளது.

அக்காலத்தில் இக்கோயில் மாகேஸ்வரக் கண்காணியும் திருப்பதியக்காணியும் உடையவனாய் இருந்தவன் மறைதேடும் பொருளான் அகளப்பிரியன் ஆவான்.

இக்கல்வெட்டுக்களில் இவ்வூர் இராசேந்திரசோழவளநாட்டுப் புறங்கரம்பை நாட்டைச்சேர்ந்ததென்று குறிக்கப்பெற்றுள்ளது.

ஓர் அன்பரின் உபயமாகத் தங்கக்கவசங்கள் செய்யப்பட்டு, விசேஷ காலங்களில் மட்டும் சார்த்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தங்கக்கவசக் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்

தலத்திற்குத் தலபுராணம் உள்ளது - இயற்றியவர் களப்பால் என்னும் ஊரில் வாழ்ந்த ஆதியப்பர்.

"நீருளார் கயல் வாவி சூழ்பொழில்

நீண்ட மாவயலீண்டு மாமதில்

தேரினார் மறுகில்

விழா மல்கு திருக்களர்

ஊருளாரிடு பிச்சை பேணும்

ஒருவனே ஒளிர் செஞ்சடைம்மதி

ஆர நின்றவனே

அடைந்தார்க் அருளாயே". - சம்பந்தர்

ஆலயம் தொழுதல் சாலவும் நன்று எனும் முதுமொழிக்கேற்ப இவ்வாலயம் காண்போம் வாரீர்.

This Shivastalam located 12 km North west of Tirutturaippundi on the Southern banks of the river Pamani, is also known as Parijata vanam. It is situated on the Mannargudi Muttuppettai road. Tirukkottur is a Shivastalam in the vicinity. This shrine is regarded as the 105th in the series of Devara Stalams in the Chola Region south of the river Kaveri.
srisambandha pillai paadiya thalam!

location: 10kms in thiruththuraippoondi - mannaarkudi! frm thiruthuraipoondi to mannArkudi take left diversion thru vaedhapuram road and again left turn to muthuppaettai road!


Legends: Natarajar is said to have blessed Durvasar with a vision of the cosmic dance. The latter's image is seen facing Natarajar here. Parasarar is also believed to have worshipped here.

The Temple: This temple with 3 prakarams occupies an area of about 1.5 acres. The pillared halls in this temple are of great beauty. A lofty Rajagopuram (150 feet) adorns the entrance to this temple enclosed by massive walls. The Valampuri Vinayakar and the Subramanyar shrines are also of significance here. Six worship services are offered each day here.
Nearby cities:
Coordinates:   10°33'42"N   79°34'7"E
This article was last modified 7 years ago