Kongarayanur sivan temple (Kongarayanur)

India / Tamil Nadu / Nellikkuppam / Kongarayanur / melpattaampakkam road

பண்ருட்டி அருகில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் அருகில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளதுகொங்கராயனுர்.

கடையேழு வள்ளல்களில் ஒருவர் ஓரி.ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர். அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில் முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன், மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான், மலையமான், சேதிய ராயன்,வன்னிய நாயகன், பாண்டியராயர், கோவலராயர்,வாணகோவரையன்,சற்றுக்குடாதான்,காடவராயன், பல்லவராயர், அரைய தேவன்,நாடாழ்வான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.

இப்படி ஓரியின் பரம்பரையினர் வாழ்ந்து வந்த பகுதி தான் கொங்கராயனுர்.

இவ்வூரின் வடகிழக்கில் பெரிய நிலபரப்பில் உள்ளது கோயில். கிழக்கு நோக்கிய சிவாலயம். எனினும் வாயில் தென்புறம் உள்ளது.கோயிலுக்கு வடக்கில் குளம் ஒன்றுள்ளது. இக்கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர்.

தென்மேற்கில் சிற்றாலயத்தில் அழகிய விநாயகர் உள்ளார். கருவறை விமானம் காண்போர் மனதை கொள்ளைகொள்ளும் அளவுக்கு அழகாக உள்ளது, சுதை சிற்ப்பங்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முககடவுள் ,சீனுவாசபெருமாள், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். தென்முககடவுள் திருமேனி அதிஅற்ப்புதமாக சிற்பமாக்கப்பட்டுள்ளது. முருகன், லட்சுமி சிற்றாலயங்களும் அழகுடன் உள்ளது.

இறைவனின் நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் சுதைவடிவில் உள்ளனர். நந்திஎம்பெருமான் சற்றே இடது புறம் திரும்பியவண்ணம் உள்ளார் ,இதனால் இக்கோயில் 7 ஆம் நூற்றாண்டின் பின்னரே கட்டப்பட்டிருத்தல் வேண்டும் என எண்ணுகிறேன்.

இறைவன்- சிங்காரநாதர்

அமைதியும் அழகும் நிறைந்த இக்கோயிலுக்கு வந்து உங்கள் மனக்குறைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.
Nearby cities:
Coordinates:   11°47'53"N   79°37'4"E
This article was last modified 7 years ago